இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது டோல்கேட் கட்டண உயர்வு! தமிழகத்தில் எந்தெந்த சுங்கச் சாவடிகள்?
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் டோல்கேட் கட்டணம் உயர்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச் சாவடிகளில் டோல்கேட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.10 முதல் ரூ. 60 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள், வணிகர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சுங்கச்சாவடி கட்டணம்
நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது. புதிய நிதி ஆண்டு தொடங்கும் நிலையில் இந்த மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. கட்டண உயர்வு குறித்து அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் இந்த டோல்கேட் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

29 டோல்கேட்களில்
தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் வழிகளிலும், கோவை, மதுரை செல்லும் வழிகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை புறநகரில்
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி சுங்கச்சாவடி, திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் சந்திப்பில் உள்ள கோவளம் சுங்கச்சாவடி, பரனூர், வானகரம் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்த சுங்கக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

விலை உயர்வு அபாயம்
ரூ.10 முதல் ரூ. 60 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, காருக்கு ரூ.60 லிருந்து ரூ.70 ஆகவும், இலகுரக வாகனத்துக்கு ரூ.105 லிருந்து ரூ.115 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.225 லிருந்து ரூ.240 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுங்கக் கட்டணம் உயர்வதால், லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு வணிகர் சங்கங்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வாகன ஓட்டிகளும் டோல்கேட் கட்டண உயர்வைக் கைவிடக்கோரி கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications