தக்காளி விலை கிடுகிடு உயர்வு.. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று மேலும் 10 ரூபாய் அதிகரிப்பு!
சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் தக்காளியின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70 முதல் 80 வரை விற்பனையாகிறது. மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் வந்து இறங்குகின்றன.
கோயம்பேடு சந்தைக்கு ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி பகுதிகளிலிருந்தும், கர்நாடக மாநிலம் கோலார், சீனிவாசபுரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளிலிருந்தும் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
பருவநிலை மாற்றத்தால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் தொடர் மழை பெய்து வருவதன் எதிரொலியாக தக்காளியின் வரத்து சரிந்து விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.60ஆக விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தரம் 50 ரூபாய். மூன்றாம் தரம் 40 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையில் ரூ.60-க்கும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.70 முதல் ரூ.80 வரையும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
உருளைக்கிழங்கு ரூ.30, ரூ.20, ரூ.18 என மூன்று விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.40, ரூ.50, ரூ.60 என்று விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய் 10 ரூபாய் உயர்ந்து 30 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் காய்கறிகள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக மார்க்கெட் வியாபாரிகள் கூறுகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications