குட்நியூஸ்.. மீண்டும் மீண்டும் குறையும் தக்காளி விலை! இன்றைய கோயம்பேடு காய்கறிகளின் ‛ரேட்’ இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை மீண்டும் குறைந்தது. நேற்றைய தினத்தை ஒப்பிடும்போது தக்காளியின் விலை என்பது கிலோவுக்கு ரூ.10 சரிந்துள்ளது. மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பிற காய்கறிகளின் இன்றைய விலை பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

இந்தியாவில் சமீபகாலமாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 2 வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை என்பது பல இடங்களில் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. அதன் பிறகு குறைந்து வந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் கிடுகிடுவென உயர்ந்தது.

Tomatoe price slightly down Rs.10 per kg at Koyambed Market in Chennai

தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.150யை கடந்தது. தமிழ்நாட்டில் அரசு சார்பில் ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலைக்கு விற்பனை என்பது தொடங்கியது.

இந்நிலையில் தான் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து தக்காளி விலை குறைந்து வருகிறது. தக்காளி வரத்து அதிகரித்ததால் இந்த விலை என்பது குறைய தொடங்கியது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன்படி கடந்த 3ம் தேதி சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனையானது.

அதன்பிறகு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தான் நேற்று முன்தினம், நேற்று ஆகிய 2 நாட்கள் தக்காளி விலையில் மாற்றம் இல்லை. இரு நாட்களும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனையாது. இந்நிலையில் தான் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை என்பது ரூ.10 குறைந்துள்ளது.

இதன்மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தக்காளி வரத்து தற்போது அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.100யை கடந்து விற்பனையான நிலையில் தற்போது ரூ.100க்கு கீழ் குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tomatoe price slightly down Rs.10 per kg at Koyambed Market in Chennai

அதேவேளையில் நவீன் தக்காளி கிலோ ரூ.100க்கும், வெங்காயம் ரூ.22க்கும் உருளை ரூ.33க்கும், சின்ன வெங்காயம் ரூ.80க்கும், ஊட்டி கேரட் ரூ.60க்கும், பீன்ஸ் ரூ.50க்கும், ஊட்டி பீட்ரூட் ரூ.40க்கும், வெண்டைக்காய் ரூ.30க்கும், சேனைக்கிழங்கு ரூ. 44க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் முருங்கைக்காய் ரூ.30க்கும், காலிபிளவர் ரூ.25க்கும், பச்சை மிளகாய் ரூ.55க்கும், பட்டாணி, பூண்டு தலா ரூ.200க்கும், இஞ்சி ரூ.210க்கும், பச்சை குடைமிளகாய் ரூ.100க்கும், வண்ண குடைமிளகாய் ரூ.160க்கும், தேங்காய் ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+