Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘தாறுமாறு’ தக்காளி.. இன்று மேலும் 10 ரூபாய் விலை உயர்வு.. கோயம்பேடு மார்க்கெட்டில் புதிய உச்சம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று மேலும் ரூ.10 உயர்ந்து 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ. 130க்கு விற்கப்படுகிறது தக்காளி.

கடந்த வாரம் தக்காளி விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ எட்டியது. மேலும் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Tomatoes price hiked Rs 10 more in Koyambedu Market Chennai: selling at Rs 130 per kg

தக்காளி விலை கடும் உயர்வு: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பருவநிலை காரணமாக உற்பத்தி குறைந்ததும், சில மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏறுமுகமாக இருந்து வந்த தக்காளியின் விலை நேற்று முன்தினம் சற்று குறைந்தது. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.65-க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்தது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ110-க்கும் விற்கப்பட்டது. சென்னையில் வெளி மார்க்கெட்டுகளில் 1 கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்பட்டது.

Tomatoes price hiked Rs 10 more in Koyambedu Market Chennai: selling at Rs 130 per kg

இன்று மேலும் 10 ரூபாய் அதிகரிப்பு: இந்நிலையில், இன்று மேலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலை மேலும் 10 ரூபாய் அதிகரித்து கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ130- 140 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேட்டு காய்கறி சந்தைக்கு நாளொன்றுக்கு 1100 டன் தக்காளி தேவை உள்ளது. ஆனால், இன்று 15 லாரிகளில் 380 டன் அளவில் மட்டுமே தக்காளி எடுத்து வரப்பட்டுள்ளன. வரத்து குறைவு காரணமாக மொத்த விற்பனையில் இன்று 1 கிலோ தக்காளி 100க்கும், சில்லரையில் 130 வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாளில் 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய தக்காளி வராததால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தக்காளிக்கு பெரும் டிமாண்ட் ஏற்பட்டு தொடர்ந்து விலை உயர்ந்து வருவது, பொதுமக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+