நிவர் புயல் - நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிப்பு : முதல்வர்
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அது போல் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிவர் புயல் மையம் கொண்டிருக்கிறது. இந்த புயல் அதி தீவிர புயலாக மாறிவிட்டது. இந்த நிலையில் புயலின் தன்மை குறித்து அறிய சேப்பாக்கத்தில் உள்ள புயல் கட்டுப்பாட்டு மையத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார்.
அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கரும் வந்திருந்தார். அப்போது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார். அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நாளை பொது விடுமுறை
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிவர் புயல் காரணமாக நாளை அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள்
அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது. அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. நிலைமைக் கேற்ப விடுமுறையை நீட்டிப்பது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும். மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம்.

தீவிர புயல்
நிவர் புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெறுவதால் புயல் கரையைக் கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

செம்பரம்பாக்கம் ஏரி
கடலோர மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பொழிவை பொருத்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications