Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துவரம் பருப்பு + பாமாயில்.. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. பொதுமக்கள் ‛ஹேப்பி’

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு மாதத்துக்கான (மே) துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ரேஷன் கடைகளில் தடையின்றி கிடைக்கும் என தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு உள்ளதாக புகார் எழுந்த நிலையில் அனைவருக்கும் இரு பொருட்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நம் மாநிலத்தில் 34,793 ரேஷன் கடைகள் மூலம் மொத்தம் 2.23 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Toor Dal and Palm Oil sents to ration shop for May Month distribution says Tamil Nadu governemnt

ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்டவற்றை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு வழங்கும். ஆனால் இந்த மாதம் பல ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு, பாமாயில் அனுப்பி வைக்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தன. துவரம் பருப்பு, பாமாயிலுக்க தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனால் மே மாதம் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் தான் மே மாதம் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை கிடைக்கும் என தமிக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் சிறப்பு பொது விநியோக திட்ட பொருட்களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் கடந்த 14.04.2007 முதல் ஒவ்வொரு மாதமும் திறந்தவெளி ஒப்பந்தபுள்ளி மூலம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் மே மாதத்துக்கு தேவையான 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு/ கனடா மஞ்சள் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளுக்குரிய இ-ஒப்பந்தப்புள்ளி இந்திய தேர்தல் ஆணைய 18.04.2024ம் தேதி ஒப்புதலின்படி 20.4.2024 அன்று கோரப்பட்டு 20.05.2024 அன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 4.05.2024 அன்று விலைப்புள்ளி திறக்கப்பட்டது. இதில் குறைந்த விலைப்புள்ளி அளித்திருந்த பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்தாரர்களுடன் விலைக்குறிப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

விலைக்குறைப்பு பேச்சுவார்த்தையில் நியாயமான விலை கிடைக்க பெற்றதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குழுமத்தின் ஒப்புதலின்படி துவரம்பருப்பு விநியோகிப்பாளர்கள் நால்வருக்கும், பாமாயில் விநியோகிப்பாளர்கள் மூவருக்கும் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு நாளது தேதி வரை நடப்பு மே மாதத்துக்குரிய விநியோகிப்பதற்காக நியாய விலைக்கு கடைகளுக்கு 5,405 மெட்ரிக் டன் துவரம் பருப்பு மற்றும் 31,19,722 பாமாயில் பாக்கெட்டுகள் நகர்வு செய்யப்பட்டுள்ளன. ஆகவே அனைத்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+