இந்தியாவிலேயே பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு கிடையாதா? இதென்ன சர்னு கீழே போயிருச்சு
சென்னை: பெண்களின் பாதுகாப்பு என்பது உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது, அதிலும் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் மோசமடைந்து வருகிறது. நம்ம தமிழ்நாட்டிலும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாகிவிட்டதாகவே தெரிகிறது.. காரணம், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்னோக்கி போயிருக்கிறது.. உலகளாவிய கல்வி மற்றும் திறன் தொடர்பான தீர்வுகளுக்கான வீல்பாக்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.. இந்த தகவலானது, தமிழக மக்களுக்கு கவலையை தந்து வருகிறது. இதற்கு முன்பும் வெளியான ரிப்போட்டையும் இப்போது பார்ப்போம்.
இன்றைய சூழ்நிலையில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து இடங்களிலும் பணியாற்றி வருகிறார்கள்.. அனைத்து பணிகளையும் செய்யக்கூடிய திறனையும் பெற்று, முன்னேறி வருகிறார்கள்..

கல்வி, வேலைவாய்ப்புகளும் இந்தியாவில் பெருகும் சூழலில், அதை பெண்களும் சரியாக பயன்படுத்தி கொண்டு பயனடைகிறார்கள்.. எனினும், சில சமயங்களில் பணியிடங்களில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடுகிறது..
பொதுவாக பெண்களுக்கு அவர்கள் பணிபுரியும் பகுதியில், அவர்களுக்கான சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகள் போன்றவற்றுடன் பாதுகாப்பான சூழலும் கிடைப்பது கட்டாயமாகும்.. இவைகள் அனைத்துமே கிடைத்துவிட்டால், தொழில்துறையிலும், கல்வித்துறையிலும் பெண்களின் பங்களிப்பு இன்னும் அதிகரித்துவிடும்.
பாதுகாப்பு குறைபாடுகள்
எனினும், பணியிடங்களில் பாதுகாப்பு குறைபாடுகளையும், அதனால் ஏற்படும் குற்ற சம்பவங்களையும் தவிர்க்க முடிவதில்லை.. கடந்த வருடம் தேசிய குற்றப் பதிவுகளின் (NCRB) அடிப்படையில், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான முதல் 10 நகரங்களில் சென்னை 2வது இடத்தை பிடித்திருந்தது நினைவிருக்கலாம்.
விரிவான கண்காணிப்பு மற்றும் சிசிடிவி கேமராக்களை கணக்கிட்டு செயல்படுத்தும் திறமையான காவல்துறையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை இந்த 2வது இடத்தை பிடித்திருந்தது.
சிறந்த பாதுகாப்பு நகரங்கள்
பெண்களின் பாதுகாப்பு அவசியம் என்பதால்தான், பல நிறுவனங்கள் இதுகுறித்த ஆய்வுகளை வருடா வருடம் நடத்தி வருகிறார்கள்.. பன்முகத்தன்மை ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம், கடந்த வருடம் ஆய்வு ஒன்றை நடத்தி, பெண்களுக்கான சிறந்த நகரங்கள் (TCWI) பட்டியலையும் வெளியிட்டிருந்தது.
அதில், 113 நகரங்களில் ஆய்வு செய்து, பெண்களின் வேலைவாய்ப்பிற்கு மிகவும் உகந்த சூழலையும், பாதுகாப்பையும் உருவாக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக கூறியிருந்தது.. சென்னையை தொடர்ந்து பெங்களூர், புனே, மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் இருக்கின்றனவாம்.
ஆய்வு நடத்திய அமைப்பு
அதாவது, பெண்களுக்கான பாதுகாப்பு விகிதத்தில் தேசிய சராசரியை விட தென் மாநிலங்கள் முன்னணியில் இருப்பதாக செயற்பாட்டாளர்களும் இதற்கு கருத்து கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், இந்தியா ஸ்கில்ஸ் என்ற பெயரில் நடப்பு ஆண்டுக்கான அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.. அதில், பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான மற்றும் விரும்பக்கூடிய டாப் 10 மாநிலங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு 4வது இடம்
இதில், நாட்டிலேயே ஆந்திர பிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது.. 2வது இடத்தை கேரளாவும், குஜராத் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.. அந்த லிஸ்ட்டில் நம்ம தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது.. தமிழகத்துக்கு பிறகு மராட்டியம், டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் அரியானா போன்றவை இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து வெளியாகியிருக்கும் அறிக்கையில், "பணிபுரியும் இடங்களில் வாழ்வதற்கேற்ற விஷயங்களை எளிமையான முறையில் கிடைக்க பெறுதல் மற்றும் பாதுகாப்பு போன்றவை பெண்களின் தேர்வாக உள்ளது. பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஓர் அளவீடு என்ற அளவில் இல்லாமல், கல்வி, வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கான பிரதிபலிப்பாகவும் உள்ளது.
பணியிடங்களில் பாதுகாப்பு
இதுபோன்ற பாதுகாப்பான சூழல், உட்கட்டமைப்பு மற்றும் தொழிலில் முன்னேற்றம் போன்றவை அந்த இடங்களை நோக்கி பெண்கள் படையெடுக்க வழிவகுக்கிறது. பெண் பணியாளர்களுக்கு ஆதரவான சுற்றுச்சூழலை அதிகம் கொண்டிராத மாநிலங்கள், பெண் பணியாளர்கள் முன்னேற்றத்திற்காக பங்காற்றுவதில் குறைவான வளர்ச்சி விகிதங்களை கொண்டுள்ளன.
அதனால், பணி வாய்ப்புகளை வழங்குபவர்கள், இந்த தரவுகளை அடிப்படையாக கொள்ளலாம். அப்போது அதிக பாதுகாப்பு போன்றவைகளுடன் பணியிடங்களை உருவாக்கி கொள்ள முடியும். மேலும், ஆள்தேர்வுக்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்கும் அவற்றை வழிகாட்டியாக கொள்ளலாம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2வது இடம், முதலிடத்தில் இருந்த தமிழகம், சென்னை இப்போது 4வது இடத்துக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications