இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 21/02/2026: திருமாவளவன் முதல் புஸ்ஸி ஆனந்த் வரை! நச் பாயிண்ட்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் அனல் தெறிக்கும் கருத்துகளை பேசி வருகின்றனர். அந்த வகையில் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை இங்கே சுருக்கமாக காணலாம்.
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பை கூட்டி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, அரசியல் மாநாடு, நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் என்று தொடர்ந்து கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று வருகின்றனர். அந்தவகையில் அவர்கள் கூறும் கருத்துகளை சுருக்கமாக இங்கு தருகிறோம்.

அந்த வகையில் இன்றைய டாப் 10 பேச்சுக்கள் (21/02/2026) தலைவர்களின் நச் கருத்துக்கள் நறுக்கென்று உங்கள் பார்வைக்கு..
உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‛‛நம் அவைரின் உயிரோடும், உணர்வோடும் கலந்த, நம் தாய்மொி தமிழை போற்றி மகிழ்வோம். எந்த வடிவில் மொழித்திணிப்பு வந்தாலும் கழக தலைவர் முதலமைச்சர் தலைமையில் ஒன்றிணைந்து வீழ்த்துவோம்'' என்றார்.
அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி, ‛‛கூட்டணியில் கூடுதல் கட்சிகள் சேர்ப்பது எங்கள் கட்சித் தலைவரின் சாணக்கியத்தனம். கூட்டணியில் அதிகமான கட்சிகள் இணைந்தாலும் அவர்களுக்கு உரிய இடங்களை முதல்வர் வழங்குவார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. 3-வது இடத்தில் உள்ள ஆட்களை பற்றி எல்லாம் நாங்கள் பேசுவது இல்லை.'' என்றார்.
அமைச்சர் மா சுப்பிரமணியன்
அமைச்சர் மா சுப்பிரமணியன்,‛‛திராவிட மாடல் ஆட்சி மிகச்சிறப்பாக நடக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடம் உள்ள எண்ணம் அவருக்கும் உள்ளது. அதனை தான் வெளிப்படையாக கூறியிருக்கிறார்'' என்றார்.
தொல் திருமாவளவன்
விசிக தலைவர் தொல் திருமாவளவன், ‛‛ வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் ஆர்.எஸ்.எஸ் தான் நாட்டை ஆளும். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையிலான திராவிட இயக்கம் சங்பரிவார் கையில் சிக்கியுள்ளது. திருவள்ளூருக்கு காவி உடை அணிந்து எடப்பாடி பதிவிடும் நிலை வந்துவிட்டது. அதிமுக தலைவர்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்'' என்றார்.
வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ‛‛ஓபிஎஸ்சும் அவரது மகனும் முதல்வரை பார்த்து விட்டார்களே. இந்த ஆட்சி திரும்ப வரணும் என வாழ்த்தி இருக்காரே. அப்போ கூட்டணிக்குள்ள வந்துட்டாருனு தான ரு்த்தம். தன்னுடைய தன்மானத்தை பாதுகாத்து கொள்ள மிக ஆழமாக யோசித்து இந்த முடிவை எடுத்துமுதல்வரை பாராட்டி கூட்டணிக்கு வருவதற்கான சமிக்ஞை காட்டியிருக்கிறார்'' என்றார்.
புஸ்சி ஆனந்த்
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ‛‛ உண்மையான தோழர்கள், உண்மையான தொண்டர்கள் இருக்கின்ற ஒரே கட்சி தவெக தான். காசு, பணம் எதுவும் இல்லாமல் உண்மையும் உழைப்பும் இருக்கிற கட்சி தவெக. நானும் ஊழல் செய்ய மாட்டேன். என்னுடன் இருப்பவர்களும் ஊழல் செய்ய மாட்டார்கள் என்று சொன்ன ஒரே தலைவர் விஜய் தான். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே உச்சத்தில் இருக்கும் போதே வந்து இருக்கிறார். விஜய் ரிடயர்மெண்ட் ஆன பிறகு வரல.. ஒரே ஒரு கையெழுத்து போட்டால் போதும், எல்லாரும் போட்டி போட்டு படத்தை வாங்குவார்கள்'' என்றார்.
இடும்பாவனம் கார்த்திக்
நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக், ‛‛மக்கள் எங்களை போதுமான அளவுக்கு அங்கீகரிக்கவில்லை என்ற மனக்குறை இருக்கிறது. ஆனால் சலிப்பு, அயர்ச்சி, சலிப்பை தரவில்லை. இந்த இனம் வீழ்ந்துவிட்டது. அதனை மீட்டெடுக்க அரசியல் பயணத்தை தொடங்கி மேற்கொண்டு வருகிறோம். நாம் தமிழர் கட்சி பெரிய அளவில் தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் கூட வாக்குகள் அதிகரித்து வருகிறது. ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் இருப்பது போல் விகிதாச்சார முறை இருந்திருந்தால் நாம் தமிழர் கட்சிக்கு 25 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருப்பார்கள். ஆனால் அந்த முறை இல்லை'' என்றார்.
-
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
1000 சவரன் தங்க நகை, மகளுக்கு கடன்! விஜய்யின் சொத்து பத்திரத்தில் முரண்பாடு? திமுக புள்ளி கூறுவதென்ன -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications