29 வயதில் முதல்வர்! யார் அவர்? இந்தியாவின் டாப் 10 இளம் முதல்வர்கள்!
சென்னை: இந்தியாவில் இளம் வயதிலேயே முதல்வராகப் பதவியேற்றவர்கள் யார்? யார்?
இந்தியாவில் பல மாநில முதல்வர்கள் குறைந்தது 50 வயதைக் கடந்தவர்களாகவே இருக்கிறார்கள். இளம் வயதிலேயே முதல்வர்களாக ஒருவரால் வர முடியாதா? என்று புதியதாக வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கப் போகும் இளைஞர்கள் மனதில் தோன்றுவது இயல்பு.

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு 73 வயதாகிவிட்டது. தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு 71 வயது ஆகிவிட்டது. ஆனால், இன்றும் இவர்கள் இளைஞர்களுக்கு இணையாக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் மீது ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவர் அசராமல் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

இந்த வயதில் ஒரு இளைஞருக்கு இணையாகச் சுற்றுப்பயணம் செய்கிறார். தேர்தல் மேடைகளில் மூச்சு விடாமல் கர்ஜிக்கிறார். இந்த 73 வயது மனிதரா இந்தளவுக்குச் சுறுசுறுப்பாக இருக்கிறார் எனத் தோன்றும் அளவுக்கு உள்ளது அவரது செயல்பாடு.
அதைப்போல்தான் மு.க.ஸ்டாலினும். அவரது உடல்நிலை பற்றிக் கடந்த 30 ஆண்டுகளாக வதந்திகளை சில நபர்கள் தொடர்ந்து கிளப்பி வருகின்றன. அதை எல்லாம் முறியடித்து முன்னேறிச் சென்று கொண்டுள்ளார் அவர்.

ஆகவே, வயதான அரசியல்வாதிகளின் செயல்பாட்டில் குறைத்து மதிப்பிடுவது இந்தப் பட்டியலின் நோக்கமல்ல. இருந்தாலும் இந்திய அரசியலில் இளம்வயதில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர்களைப் பற்றி ஒரு பட்டியலைத் தயாரிக்க வேண்டி இதை எழுதியுள்ளோம்.
இந்தியாவில் இளம் முதலமைச்சர் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தான். அவர் 38 வயதில் முதல்வராகப் பதவியேற்றார். 2012 மார்ச் 21 அன்று இவர் பதவியேற்றார். 1978இல் பிறந்த இவர், இளம் வயதிலேயே முதல்வராகப் பதவியேற்றது இந்தியா முழுக்க அந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிய செய்தியாக மாறிது.

இப்போது உபியின் 32வது எதிர்க்கட்சித் தலைவராக அகிலேஷ் யாதவ் பதவியில் இருக்கிறார். இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமாகக் கருதப்படும் உபி அரசியல் களத்தை இந்த இளைஞர் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிகப்பெரிய சாதனையாகவே சொல்லப்படுகிறது.
என்னதான் இளம் வயதிலேயே முதல்வர் நாற்காலியில் அகிலேஷ் அமர்ந்தாலும் ஆனால், அம்மாநிலத்தில் முதல் இளம் முதல்வர் அவர் அல்ல. அவருக்கு முன்பே அந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார் மாயாவதி. அவர் 1995 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி 39 வயதில் உபியின் முதல்வராகப் பதவியேற்றுச் சாதித்துக் காட்டி இருந்தார்.
அதுவும் ஓபிசி சாதியின் செல்வாக்கு மிக்க மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாயாவதி முதல்வர் நாற்காலியில் வந்து அமர்ந்தது இன்றுவரை ஒரு சரித்திர சாதனையாகும்.

இந்த இளம் முதல்வர் பட்டியலில் தனது பெயரையும் சேர்த்துக் கொண்டுள்ளார் உமர் அப்துல்லா. இவர் பிரிக்கப்படாத ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக 38 வயதில் பதவியேற்றார். 5 ஜனவரி 2009 அன்று இவரது பதவிப் பிரமாணம் நடைபெற்றது.
இவர்களைவிட அருணாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் பேமா கந்து 36 வயதிலேயே முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார். 17 ஜூலை 2016 அன்று இவர் பதவியேற்றார்.
இவர்களைத் தொடர்ந்து அடுத்த சாதனையாளராக இருப்பவர் சதீஷ் பிரசாத் சிங். இவர் இப்போது உயிருடன் இல்லை. 1968 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி 38வயதில் பீகார் மாநில முதல்வராகப் பதவியேற்றார் சிங். சமீபத்தில் 2020இல் தான் இவர் மறைந்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரேம் கந்து தூங்கான். இவர் தனது 29 வயதில் அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு 1978ல் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவர் முதல் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
அதாவது 13 ஆகஸ்ட் 1975இல் இவரது பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இன்று வரை இம்மாநிலத்தின் இளம் முதலமைச்சர் என்று பெயருக்கு இவரே சொந்தக்காரராக இருந்து வருகிறார்.

அசாம் முதல்வர் பிரபுல்ல குமார் மஹந்தா 33 வயதில் முதல்வரானவர். 24 டிசம்பர் 1985 இல் அசாம் மாநிலத்தின் 11ஆவது பதவியேற்றார். அம்மாநிலத்தில் செயல்பட்டு வரும் அசோம் கண பரிஷத் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர்.
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா இந்த இளம் வயது முதல்வர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அவர் 38வயதில் முதல்வராகப் பதவியேற்றார். அப்போது இவரது யுபிஏ கூட்டணியில் ஆட்சி அமைக்கப்பட்டது. இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதே அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக கெகாங் அபாங் 30வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வரலாற்று நிகழ்வு 1980 ஜனவரி மாதம் 18 ஆம் தேதி நடந்தது. இவர்தான் இந்த மாநிலத்தின் மூன்றாவது முதல்வர்.
ஆரம்பக் காலங்களில் ஜனதா தளம் (செக்யூலர்) கட்சியிலிருந்து செயல்பட்ட இவர், பின் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். அதன்பிறகு அருணாசல் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்ட இவர், இப்போது அருணாசல் டமாக்ரடிக்ஸ் பார்டியில் உள்ளார்.












Click it and Unblock the Notifications