டாப் 3 அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்! இதுதான் முக்கியம்
சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று கடந்த சில நாட்களில் மட்டும் 3 முக்கியமான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
இந்தியாவிலேயே பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாடுதான் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக அதிகம் செலவு செய்யும் இரண்டாவது மாநிலமாக உள்ளது. இப்போது, 14 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களைக் கொண்டு தமிழ்நாடு அரசு பணிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் அதிக அரசு ஊழியர்கள் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று கடந்த சில நாட்களில் மட்டும் 3 முக்கியமான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அறிவிப்பு 1 - தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் மாநில அரசு பணியாளர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பு 2- தமிழ்நாட்டில் பென்சன் வாங்குபவர்களுக்கு முக்கியமான குட் நியூஸ் ஒன்றை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது யுனெடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பென்சன் பெறுவோருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.
இதற்காக கொடுக்கப்பட்டு உள்ள அடையாள அட்டையில் புகைப்படம் இல்லை. புகைப்படம் இல்லாத வெறும் பெயர் மட்டும் கொண்ட அடையாள அட்டை உள்ளது. இதனால் இன்சூரன்ஸில் முறைகேடு நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பென்ஷன் பெறும் அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் புகைப்படத்துடன் கூடிய மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையை புகைப்படத்துடன் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் இதற்கான படிவங்களை டவுன்லோட் செய்ய முடியும்.
அந்த படிவங்களை நிரப்பி, கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் அப்லோட் செய்ய வேண்டும். இதில் போட்டோவை பதிவேற்றுவது எப்படி என்பது தொடர்பான விவரங்கள் கொடுப்பட்டு இருக்கும். உங்களுடைய போட்டோ அப்டேட் செய்யப்பட்டபின், நீங்களே ஆன்லைன் வழியாக கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் உங்கள் புதிய அடையாள அட்டையை பெற முடியும்.
அறிவிப்பு 3: அடுத்த அதிரடியாக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை கவுரவிக்க சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.17.15 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் ஊதிய நிலுவைத் தொகை ரூ.171.05 கோடி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணி புரிந்து வரும் 1.14 லட்சம் பணியாளர்களால், தினமும் 20,111 பேருந்துகள் வரை தமிழ்நாடு முழுவதும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் மக்களின் போக்குவரத்திற்காக இயக்கப்பட்டு பயணிகள் தினமும் பயன் பெறுகின்றனர்.
இவர்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள். இந்த அறிவிப்பு போக்குவரத்து தொழிலாளர்கள் இடையே பெரிய அளவு வரவேற்பை பெற்றுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications