கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட டாப் 5 காரணங்கள்! சரி செய்வது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் (மாதம் ரூ.1,000) பலர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகமான பெண்கள் தகுதி பெற்றும் சில பொதுவான தவறுகளால் இந்த உதவியை பெற முடியாமல் சில பெண்கள் தவிக்கின்றனர். இந்த நிலையில், பொதுவாக ஏற்படும் 5 முக்கிய தவறுகள் மற்றும் அவற்றைத் தவிர்க்கும் வழிகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

Magalir Urimai Thogai


1. ஆதார் விவரங்களில் தவறு

விண்ணப்பதாரரின் ஆதார் கார்டில் உள்ள பெயர், எண், அல்லது வங்கிக் கணக்குடன் இணைக்கப்படாத ஆதார் போன்ற விவரங்களில் முரண்பாடு இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.


தீர்வு:

  • ஆதார், ரேஷன் கார்டு மற்றும் வங்கிக் கணக்கில் உள்ள பெயர், பிற விவரங்கள் அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும்.
  • ஆதார் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

2. தேவையான ஆவணங்கள் முழுமையாக இல்லை

வருமான சான்று, நில விவரம், ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் பூரணமாக இல்லை அல்லது தவறாக இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.


தீர்வு:

  • அனைத்து தேவையான ஆவணங்களையும் முறையாக தயார் செய்து, தெளிவாக ஜெராக்ஸ் எடுத்து சமர்ப்பிக்கவும்.
  • தவறான ஆவணங்களால் நிராகரிக்கப்பட்டால், சரியான ஆவணங்களைத் திரட்டி மீண்டும் விண்ணப்பிக்கவும்.

3. தகுதி விதிகளை பூர்த்தி செய்யாதது

வருமான வரம்பு (வருடத்திற்கு ரூ.2.5 லட்சம்) மீறிப்போய்விட்டது, குடும்பத்தில் அரசு ஊழியர்/ஓய்வூதியர் இருப்பது, வருடத்திற்கு 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவது, நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பது போன்றவை, இந்த திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி விதிகளை பூர்த்தி செய்யாததால் நிராகரிப்பு ஏற்படுகிறது. உங்கள் மகன் ஏதோ ஒரு ஊரில் பணியாற்றிக்கொண்டிருக்கலாம், ஆனால், அவர் வருமான வரி கட்டுபவராக இருந்தால் கூட கண்டுபிடித்து உங்களுக்கு உரிமைத் தொகை வராமல் போய்விடும். இதெல்லாம் ஈஸியாக கண்டுபிடிக்க முடிகிறது. அப்படியான நிலையில், மகனின் பெயரை ரேஷன் கார்டிலிருந்து நீக்கிவிட்டு நீங்கள் மறுபடி விண்ணப்பிக்கலாம். மகனுக்கு தனி ரேஷன் கார்டு எடுத்துக்கொள்ளட்டுமே.


தீர்வு:

  • தகுதி விதிகளை விண்ணப்பிக்கும் முன்பே சரிபார்க்கவும்.
  • தவறாக நிராகரிக்கப்பட்டதாக நினைத்தால், ஆதார ஆவணங்களுடன் 30 நாட்களுக்குள் அருகிலுள்ள ஈ-சேவை மையத்தில் முறையிடவும்.

4. விண்ணப்பப் படிவத்தில் பிழைகள்

விண்ணப்பப் படிவத்தில் தவறான தகவல்கள், முழுமையாக நிரப்பாதது, அல்லது முறையான வழிகாட்டி இல்லாமல் விண்ணப்பிப்பது போன்றவை நிராகரிப்பிற்கு காரணமாகின்றன.


தீர்வு:

  • அதிகாரப்பூர்வ வழிகாட்டி படி படிவத்தை முறையாக நிரப்பவும்.
  • சந்தேகம் இருந்தால் ஈ-சேவை மையம் அல்லது அரசு முகாம்களில் உதவி பெறவும்.
  • படிவத்தை சமர்ப்பிக்கும் முன் அனைத்து விவரங்களும் சரிபார்க்கவும்.

5. மறுபரிசீலனை (Appeal) மற்றும் மீண்டும் விண்ணப்பிக்கும் வாய்ப்பை பயன்படுத்தாதது

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பிறகு, மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பை பயன்படுத்தாததால் பலர் உதவியை இழக்கிறார்கள்.


தீர்வு:

  • நிராகரிப்பு குறித்த தகவல் வந்தவுடன், காரணத்தை தெரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்.
  • ஆதார ஆவணங்களுடன் 30 நாட்களுக்குள் ஈ-சேவை மையத்தில் முறையிடவும்.
  • அரசு அறிவிப்புகளை கவனமாகப் பார்த்து, மீண்டும் விண்ணப்பிக்கும் வாய்ப்பை பயன்படுத்தவும்.

ஆதார் விவரங்களில் முரண்பாடு, ஆவணப் பிழைகள், தகுதி விதிகள் பூர்த்தி செய்யாதது, விண்ணப்பப் படிவ பிழைகள் மற்றும் மறுபரிசீலனை செய்யாமல் இருப்பது ஆகியவை முக்கிய நிராகரிப்பு காரணங்கள். அரசு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கியுள்ளது. உங்கள் விவரங்களை சரிபார்த்து, தேவையான ஆவணங்களை தயார் செய்து, முறையாக விண்ணப்பித்து உங்கள் உரிமையை பெற்றுக்கொள்ளுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+