நெல்லையில் ஏற புக் செய்துவிட்டு மதுரையில் ஏற முடியுமா? டிக்கெட் கேன்சல் ஆகுமா.. 5 ரயில்வே ரூல்ஸ்கள்
சென்னை: ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கென்று ரயில்வே சட்டத்தின் படி, சில உரிமைகள் உள்ளன. இந்த விதிகளில், சில முக்கியமான விதிகள் என்னவெல்லாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் பயணிகள் அதிகமாக ரயில் பயணத்தைதான் விரும்புகிறார்கள். தொலை தூரங்களுக்கு செல்வதென்றாலும் சரி... பக்கத்தில் இருக்கும் நகரங்களுக்கு செல்வதென்றாலும் சரி, ரயில் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு முதலில் ரயிலில் பயணம் செய்யவே விரும்புவார்கள்.

மலிவான கட்டணம்.. சரியான நேரத்திற்கு இலக்கை சென்றடைவது.. பாதுகாப்பான பயணம் என பல வசதிகள் இருப்பதால் ஏழை, எளிய மக்கள் முதல் பெரும் வசதி படைத்தவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பும் ஒரு போக்குவரத்து சேவையாக ரயில்வே உள்ளது.
முக்கியமான விதிகள்: இந்தியாவில் தினமும் ஓடும் ஆயிரக்கணக்கான ரயில்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள்... ரயில்களை பொருத்தவரை பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு விதிகளும் உள்ளன. ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கென்று சில உரிமைகள் உள்ளன. ரயில்வே சட்டத்தின் படி இந்த விதிகள் உள்ளன. இதில் சில முக்கியமான சில விதிகள் என்னவெல்லாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்..
இரண்டு ஸ்டாப் ரூல்:
* நீங்கள் போர்டிங் செய்ய இருந்த ஸ்டேஷனில் ஏறாமல் தவறவிட்டு விட்டால்,.. அடுத்த ஸ்டேஷனில் ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்படுமா? அல்லது.. டிக்கெட்டை டிக்கெட் பரிசோதகர் ரத்து செய்து விடுவாரா... என்ற சந்தேகம் பயணிகளுக்கு இருக்கும்.. இவற்றை பொறுத்தவரை..
நாம் குறிப்பிட்டு இருந்த ஸ்டேஷனில் ஏறுவதற்கு தவறிவிட்டாலும்.. அடுத்த இரண்டு ஸ்டேஷன்கள் வரை சென்று நாம் ஏறிக்கொள்ளலாம்.. அல்லது தவறவிட்ட ஸ்டேஷனில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் ரயிலில் ஏறுவதற்கு பயணிகளுக்கு உரிமை உண்டு. இந்த இரண்டில் எது முந்துகிறதோ.. அதை தாண்டி சென்றால்.. பயணிகளின் டிக்கெட் கேன்சல் ஆகிவிடும்
கடைசி நேரத்தில் டிக்கெட்டை கேன்சல் செய்த ஐஆர்சிடிசி.. நுகர்வோர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
பணத்தை திரும்ப பெறலாம்:
* தட்கல் டிக்கெட் ரீஃபண்ட்டை பொறுத்தவரை பலருக்கும் ரயில்வேயின் இந்த விதி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. தட்கல் டிக்கெட்டிலும் கூட பணத்தை திரும்ப பெறலாம். அதாவது, ரயில் 3 மணி நேரம் தாமதம் ஆனாலோ.. அல்லது ரயில் வழித்தடம் மாறினாலோ.. தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்து இருந்தால் கூட கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.
நடுவழியில் ரயில் நின்று விட்டால்:
* ரயில் பயணம் செய்ய வேண்டிய இலக்கை சென்றடையாமல் நடுவழியில் நின்றுவிட்ட பிறகு.. ரயில்வே நிர்வாகம் மாற்று ரயில் சேவையை செய்து கொடுக்கவில்லை என்றால், புக்கிங் செய்த டிக்கெட்டின் முழு பணத்தையும் திரும்ப பெற்றுக்கொள்ள பயணிகளுக்கு உரிமை உண்டு. ரயில்வே மாற்று ஏற்பாடு செய்தாலும் கூட அதில் பயணிக்கு விருப்பமில்லை என்றால் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டால்:
* ரயில் பயணத்தின் போது பயணிகள் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி கோரலாம். எந்த ஒரு ரயில்வே ஊழியரையும் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள முடியும். முதலுதவி செய்வது, தேவைப்பட்டால் மருத்துவ வசதி செய்து கொடுப்பது டிக்கெட் பரிசோதகர் (TTE) களின் கடமையாகும். அதேபோல், பயணிகளுக்கு தேவைப்பட்டால் அடுத்து வரும் ரயில்வே ஸ்டேஷனில் மருத்துவ சிகிச்சையையும் நியாயமான கட்டணத்தில் வழங்கப்படும்.
10 மணிக்கு மேல்:
* ரயிலில் இரவு 10 மணிக்கு பிறகு டிக்கெட் பரிசோதகர் பயணிகளை தொந்தரவு செய்யக் கூடாது. 10 மணிக்குள் டிக்கெட் பரிசோதகர் தனது வெரிபிகேஷனை முடித்துக் கொள்ள வேண்டும். அதேபோல ரயில்வே ஊழியர்களும் இரவு 10 மணிக்கு மேல் தொந்தரவு செய்யக் கூடாது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications