டாப் ஹீரோக்களுக்கு சம்பளம் கிடையாது? வருவாயில் பங்கு! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி
சென்னை: சென்னை எழும்பூரில் நடைபெற்ற சினிமா தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அஜித், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் வியாபார பங்கீட்டு முறையில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும், வெப் சீரிஸ்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் அனைத்து தயாரிப்பாளர்களும் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக நடிகர் ராதா ரவி, எஸ்.வி சேகர், செந்தில், தேவயானி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பொதுக்குழு தொடங்கியதும் 2022 முதல் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதேபோன்று வாக்களிக்க தகுதியுள்ள நிரந்தர உறுப்பினர்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் 2026-2029 தேர்தலுக்கான அறிவிப்புக்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பொதுக்குழுவில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திரைப்படங்களில் நடித்துக்கொண்டு ஓடிடி வெப் சீரிஸ்களில் நடிக்கும் நடிகர்களுக்கு இனி ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரஜினி, அஜித், தனுஷ், சிம்பு, விஷால் போன்ற முன்னணி நடிகர்கள் பலரும் வியாபார பங்கீட்டு முறையில் நடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏனென்றால், இவர்கள் அதிகப்பட்ச ஊதியம் வாங்குவதால் இனிமேல் வியாபார பங்கீட்டு (Share Basic) முறையில் மட்டுமே நடிக்க வேண்டும். படங்களில் நடிக்கும் போது சில நடிகர்கள் ஓடிடி வெப் சீரியஸ்களில் நடிப்பதால், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட் பாதிக்கப்படுகிறது எனவும், இதனாலேயே மேற்கண்ட கட்டுப்பாடு விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இனி முன்னணி நடிகர்களுக்கு சம்பளம் வழங்காமல், லாபத்தின் அடிப்படையில் வரும் பணத்தினை வைத்து நடிகர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும், இதனால் படம் ஓடாமல் நஷ்டம் ஏற்பட்டால் அது சம்பந்தப்பட்ட நடிகருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், படத்தினால் லாபம் கிடைத்தால் அது நடிகருக்கும் பயனளிக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
தமிழ்நாட்டில் விஜய்.. தெலங்கானாவில் விஜய் தேவரகொண்டா! உற்று பார்க்கும் தெலுங்கு மக்கள்! என்ன மேட்டர் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications