ஏஐயால் பாதிக்கப்படாத ஒரே துறை.. பலருக்கும் தெரியாத காஸ்மடாலஜி படிப்பு! கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு
சென்னை: உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தால் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஐடி துறையில் ஐஏ காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் ஏஐ தாக்கம் இருந்து வரும் சூழலில், ஏஐ தாக்கம் இல்லாத ஒரு துறையாக அழகு சாதனவியல் துறை என்று சொல்லலாம். ஏனென்றால் சமீப காலங்களில் பெண்கள் தங்களை அழகுபடுத்தி கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் தங்களை அழகாக காட்டி கொள்ள விரும்புகின்றனர். வெறும் மேக்கப் மட்டுமல்லாமல் முகம், முடி, தலை, கால்கள் என்று அனைத்தும் அழகுப்படுத்தி கொள்வதில் தான் வரும். வேக்ஸிங், புருவத்தை வடிவமைப்பது, ஃபேஷியல், முடி வடிவமைப்பு என்று தற்காலிக அழகுபடுத்தலுக்கு கூட பலரும் அழகு நிலையங்களுக்கு செல்லும் பழக்கத்திற்கு வந்துள்ளார்கள்.

இதனால் நாளுக்கு நாள் அழகு சாதனவியல் துறை நுபுணர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காஸ்மடலாஜி துறை என்பது அழகுபடுத்துதலில் மட்டும் அடங்காது. முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவது, கரும்புள்ளிகள், முடிகளை வளரச் செய்வது, தேவையற்ற ரோமங்களை நீக்குதல், கொழுப்பை கரைத்தக் உள்ளிட்டவை வரும்.
காஸ்மடலாஜி படிப்பில் இவை சிகிச்சை முறைகளாக கற்றுத் தரப்படுகின்றன. காஸ்மடலாஜி துறையில் என்று அவர்களை நிபுணர்களாக மாற்றப்படுகிறார்கள். அதேபோல் இந்த படிப்பில் தோல் பரமாரிப்பு, தோல் பராமரிப்பு பொருட்களை பற்றி ஆராய்தல், முடி பராமரிப்பு, சரும பராமரிப்பு ஆகியவையும் கற்றுக் கொடுக்கப்படும். அதேபோல் காஸ்மடிக்ஸ் வகைகள், முகத்தின் நிறத்திற்கு ஏற்ப அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவது எப்படி உள்ளிட்டவையும் சொல்லி கொடுக்கப்படுகிறது.
இந்த படிப்புகள் டிப்ளமோ, பிஎஸ்சி காஸ்மடாலஜி, பிஜி டிப்ளமோ ஆகியவை இருக்கிறது. இந்தியாவில் லேக்மி, குருகுல் இன்ஸ்ட்டியூட், ஒரேன் இண்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் பியூட்டி, எல்டிஏ ஸ்கூல் ஆஃப் பியூட்டி உள்ளிட்ட கல்லூரிகள் சிறந்தவையாகும். இந்த படிப்பு முடிந்த பின் ஏராளமான சுய தொழில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோல் பல்வேறு அழகு சாதன நிறுவனங்களிலும் பணிகளில் இணைய முடியும். இந்த படிப்பில் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் இணைய முடியும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications