கிட்ட வந்து எடப்பாடி சொன்ன அந்த விஷயம்.. சட்டென பார்த்த மோடி.. பின்னாடியே வந்த "அந்த" போன்.. என்னவாம்
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸிடம் பிரதமர் மோடி என்ன சொன்னார்
சென்னை: எடப்பாடி பழனிசாமி + ஓபிஎஸ் இருவரும் நேற்றைய தினம் சந்தித்தபோது, முக்கிய தகவல் ஒன்றை சொல்லிவிட்டு போனாராம் பிரதமர் மோடி. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை விரைவில் இணைத்து கொள்வார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.. ஏர்போர்ட்டில் என்ன நடந்தது?
எடப்பாடி பழனிசாமி, மோடி இவர்கள் 2 பேரையும் அழைத்து பிரதமர் மோடி நேற்றைய தினம் பேசவேயில்லை.. இவர்கள் பஞ்சாயத்திலும் தலையிடவில்லை.. அப்பாயிண்ட்மென்டையும் தரவில்லை..
கடந்த முறை போலவே, ஏர்போர்ட்டில் வரவேற்கவும், வழியனுப்பவும் இவர்கள் 2 பேரும் போய் நிற்கும்படி ஆகிவிட்டது.. அந்தவகையில், ஒருங்கிணைந்த அதிமுக என்பதையே, அழுத்தமாகவும், வெளிப்படையாகவும் சொல்லியுள்ளார் பிரதமர் மோடி..

சிக்னல்
ஏர்போர்ட்டில் இவர்களுக்கு இடையில் சில அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்... இதைப்பார்த்த பிரதமர், தனித்தனியாக நின்ற எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸையும் சேர்ந்து வருமாறு சொல்ல, வேறவழியில்லாமல் 2 பேரும் சேர்ந்து மோடியை வரவேற்றுள்ளனர்.. அதை மகிழ்ச்சியுடன் மோடியும் ஏற்றுக்கொண்டுள்ளார்... இதற்கு பிறகு என்னதான் நடந்தது? பாஜக என்ன நினைக்கிறது? எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் களத்தில் வட்டமடித்து வருகின்றன.. இந்த நிலையில், சில முக்கிய தகவல்கள் இதுகுறித்து நமக்கு ஸ்பெஷலாக கிடைத்துள்ளன.

பஞ்ச் மோடி
திண்டுக்கல் விழாவை முடித்துவிட்டு மதுரையிலிருந்து கிளம்பும் முன்பு, எடப்பாடி பழனிசாமி + ஓபிஎஸ் இருவரையும் "ஒற்றுமையாக இருங்கள், அதுவே நான் எதிர்பார்ப்பது" என்பதை வலியுறுத்தும் வகையில் இருவரின் கைகளையும் மோடி இணைத்து வைத்தார் இல்லையா? இதற்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் இருக்கிறதாம்.. அதாவது, ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி.. தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ்.. ஒரு கட்டத்தில் அதிமுகவில் ஓபிஎஸ்சை இணைய வைத்தார் மோடி. அவருக்கு துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சர் பதவி தரப்பட்டது.

டேமேஜ்
நிதியமைச்சர் பதவியேற்பு விழாவில், எடப்பாடி- ஓபிஎஸ் இருவரையும் மத்திய அரசு சேர்த்து வைத்துள்ளது என்பதை பறைசாற்றும் வகையில் 2 பேரின் கைகளையும் இணைத்து உயரத் தூக்கிப்பிடித்தார் அப்போதைய பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்... அன்றைய நிகழ்வை நினைவு கூறும் வகையில்தான், இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூரித்து சொல்கிறார்கள்.. "ஓபிஎஸ்சை எடப்பாடி பழனிசாமி விரைவில் ஏற்றுக் கொள்வார். நிச்சயம் இது நடக்கும்.. ஏற்றுக்கொள்வதற்கு கால தாமதம் ஆகலாமே தவிர, தடுக்க முடியாது..

திரிவேணி புள்ளி
ஏர்போர்ட்டில், "உங்களை டெல்லியில் சந்திக்க விரும்புகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி சொல்ல, இருவரும் சகோதர உணர்வுடன் வருவதாக இருந்தால், அடுத்த வாரமே சந்திக்கலாம் என்று சொன்னாராம் பிரதமர் மோடி. அதற்கு எடப்பாடி பழனிசாமி எதையுமே சொல்லவில்லை.. ஓபிஎஸ்சை இணைப்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பது எடப்பாடிக்கு அப்-செட்தானாம்.. மோடி கிளம்பியதற்கு பிறகு 2 மணி நேரம் கழித்து, எடப்பாடிக்கு அந்த நபரிடமிருந்து ஃபோன் வந்தது. அந்த நபர் எடப்பாடிக்கு நெருக்கமான தொழிலதிபரான திரிவேணி எர்த் மூவர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்.

மூட் அவுட்
"ஓபிஎஸ் விஷயத்தில், உங்கள் பிடிவாதத்தை டெல்லி ரசிக்கவில்லை. உங்கள் பிடிவாதம் உங்களுக்கும் நல்லதல்ல, அதிமுக - பாஜக கூட்டணி அரசியலுக்கும் நல்லதல்ல என நினைக்கிறார்கள். அதனால், பிடிவாதத்தை தளர்த்துங்கள் என்று அந்த தொழிலதிபர் சொல்லியுள்ளார்... இது மேலும் எடப்பாடியை மூட் அவுட் ஆக்கியிருக்கிறது.. அதனால், அவரது பிடிவாதம் தளரும் ஓபிஎஸ்-இபிஎஸ் நட்பாவார்கள். பிடிவாதத்தை அவர் விடவில்லையெனில், நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி தனிமைப்படுத்தப் படுவார். பாஜகவுடன் ஓபிஎஸ், தினகரன் இருவரும் தனித்தனியாக கூட்டணி அமைப்பார்கள்.

"சுபம்" போல
எடப்பாடி தனிமைப்படுத்தப்படுவதுடன் அவரது இமேஜை டேமேஜாக்கும் வகையில் அவருக்கு எதிரான வழக்கினை வைத்து நெருக்கடி தரப்படும்" என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. கடந்த 2 நாட்களாகவே நடந்து வரும் சம்பவங்களையடுத்து, எடப்பாடி பழனிசாமி ஏகத்துக்கும் டென்ஷனுக்கும், நெருக்கடிக்கும் ஆளாகி உள்ளதாகவும் தெரிகிறது. இதனிடையே, ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியும் தன்னுடைய சமூகத்தை சேர்ந்தவருமான அந்த விஐபியிடம் ஆலோசித்து வருகிறாராம் எடப்பாடி.. விரைவில் "சுபம்" போல.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications