"கழுகுக்கண்".. மாஸ்டர் பிளானை கையில் எடுக்கும் திமுக.. யார் அந்த 2 பேர்?.. மூச்சுத்திணறும் அறிவாலயம்
திமுகவின் அடுத்த துணை பொதுச்செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: சுப்புலட்சுமி ஜெகதீசனின் இடத்தை அடுத்து நிரப்ப போவது யார்? அடுத்த துணை பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி திமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.
அடுத்த துணைப் பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழும்போதே, அதற்கான முதல் மற்றும் பிரதான ஆப்ஷனாக திமுகவின் எம்பி கனிமொழியின் பெயர் உச்சரிக்கப்பட்டு வருகிறது.
திமுகவிலேயே வேறு வேறு பெயர்கள், குறிப்பாக பெண் தலைவர்களின் பெயர்கள் ஆப்ஷனில் சொல்லப்பட்டு வருகிறது என்றாலும், கனிமொழி கருணாநிதியை தவிர்த்துவிட்டு வேறு எதையும் பரிசீலிக்க அவரது ஆதரவாளர்கள் தயாராக இல்லையாம்.

அசைன்மென்ட்
கனிமொழியை பொறுத்தவரை எளிமையானவர்.. இயல்பானவர்.. திறமையானர்.. பம்பரமாக சுழல்பவர்.. ஒரு அசைன்மென்ட்டை மேலிடம் தந்தால், அதை கனகச்சிதமாக செய்து முடிப்பவர்.. 20 வருடங்களுக்கு மேலாக டெல்லியில் லாபி செய்பவர்.. மேலிட தலைவர்களுடன் இணக்கமான நட்பையும், அன்பையும் பெற்றவர்.. திமுகவுக்கு இன்றுவரை பலம் சேர்க்கும் முக்கிய தூணாக விளங்குபவர்.. தலைமைக்கு எந்தவிதமான நெருடலையும், தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தாத வகையில், பல செயல்பாடுகளை அமல்படுத்தி வருபவர்.. உட்கட்சி பூசல், வதந்திகள், புரளிகள் என ஆயிரம் வந்தாலும், அவைகளை அணுகக்கூடிய முதிர்ச்சி பக்குவமுடையவர்.

கிரேட் ஜாப்
எனவே, கனிமொழிக்கு இப்படி ஒரு உயர்ந்த பதவியை தருவது மிக பொருத்தமானதாகவே இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் ஆசைப்படுகிறார்கள்.. அதுமட்டுமல்ல, மகளிர் அணி பொறுப்பை வைத்திருக்கும் கனிமொழி, துணைப் பொதுச் செயலாளர் பதவியையும் ஏற்பது திமுகவுக்குதான் பலத்தை தரும் என்கிறார்கள்.. ஒருபக்கம் துணைப்பொதுச்செயலாளர், மறுபக்கம் மகளிர் அணி என இரண்டையுமே கூடுதலாக கனிமொழி கவனிக்கும் பட்சத்தில், இரட்டிப்பு வாக்கு லாபத்தை திமுக பக்கம் அள்ளிக்கொண்டு வரும் என்று அவருடைய ஆதரவாளர்கள் பெருத்த நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

கருணாநிதி
இதனிடையே, சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை, கொங்கு மண்டலத்திற்குதான் தர வேண்டும் என்று கட்சி தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.. எனவே, கொங்கு மண்டலத்தில் போட்டிகளும், பொருமல்களும், பொறாமைகளும், வெடித்து கிளம்பி உள்ளன.. அந்த வகையில் சிலரது பெயர்கள் முணுமுணுக்கப்படுகின்றன.. குறிப்பாக, வெள்ளகோவில் சாமிநாதன், காந்தி செல்வன் இவர்களின் ஆதரவாளர்களும், அந்த பதவியை கேட்டு கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்..

பிணைப்பு - இணைப்பு
நீண்ட காலமாக திமுகவின் இளைஞர் அணித் தலைவராக பொறுப்பு வகித்து வந்த ஸ்டாலின், கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு, முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.. ஆனால், வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டபோதே, பல தரப்பில் இருந்தும் விமர்சனங்களை உருவாக்கியது... இதையடுத்துதான், உதயநிதிக்காக இளைஞர் அணி செயலாளர் பதவியை விட்டு தந்து, உதயநிதியின் இதயத்துக்கு நெருக்கமானார்.. மேலிட நன்மதிப்பையும் பெற்றார். அந்தவகையில், துணைப்பொதுச்செயலாளர் பதவியை சாமிநாதன் ஆதரவாளருக்கு வழங்கிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஐபி யார்?
மற்றொரு பக்கம், சாமிநாதனைவிட சீனியரான காந்தி செல்வன் ஆதரவு கரம் நீட்டும் மகளிர் நிர்வாகிக்குதான் அந்த பதவி தரப்பட வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.. காந்தியை பொறுத்தவரை, அன்றுமுதல் இன்றுவரை கட்சி மேலிடத்துக்கு விசுவாசமாக இருந்து வருபவர். தொகுதி மக்களின் பல்ஸை நேரடியாக அறிந்தவர்.. யார் வேண்டுமானாலும் எளிதில் அணுகி பேசக்கூடிய அளவுக்கு எளிமையானவர்.. அந்த அளவுக்கு நெருக்கமாக உள்ள நபருக்கு, இந்த பதவியை ஒதுக்கினால், தொகுதிக்கு நன்மை என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, கொங்கு மண்டலத்திற்கு அனைத்து கட்சிகளும் முன்னுரிமை அளித்தால் அது தங்கள் பகுதிக்குத்தான் நல்லது என இப்பகுதி கட்சியினர் விரும்புகின்றனர்.

திமுக முடிவு என்ன?
மகளிருக்கு ஒதுக்கப்பட்ட பதவியை ஒரு ஆணுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பே இல்லை. ஒருவேளை அப்படி ஒதுக்கப்படுமானால், விதிமுறைகளிலும் திருத்தம் செய்யப்பட வேண்டி வரும்.. அதேசமயம், விரைவில் நடைபெற உள்ள திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.. மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தல் முடிவு பெற்று புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு, அக்டோபர் 2வது வாரத்தில் திமுகவின் அதிகாரமிக்க பொதுக்குழு கூட்டம் கூட உள்ளதாக கூறப்படுகிறது.

கணிமொழி கருணாநிதி
அப்படி, பொதுக்குழு கூட்டத்தில் திமுகவில் 5 துணை பொதுச்செயலாளர்களில் கூடுதலாக 2 பேரை நியமிக்கவும் திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாம்.. அந்தவகையில், மகளிருக்கான ஒதுக்கப்பட்ட பதவியை, ஒரு ஆணுக்கும் ஒதுக்க முடியுமா? அப்படி ஒதுக்கும்பட்சத்தில் கொங்கு மண்டலத்திலேயே உள்ள புள்ளிகள் யாருக்காவது இந்த போஸ்டிங் தரப்படுமா? என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.. பொதுக்குழுவில் விதிமுறைகளை மாற்றாத பட்சத்தில், திமுகவின் பெண் தலைவர்களில், கனிமொழி சோமு, புதுக்கோட்டை விஜயா, பூங்கோதை ஆலடி அருணா என லிஸ்ட்கள் நீள்கின்றன. ஆனாலும், கனிமொழி கருணாநிதிக்கே நிறைய சான்ஸ் இருப்பதாக அறுதியிட்டு சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications