அம்மாடி.. பார்க்கவே உடம்பு சிலிர்க்குதே.. இது கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டா? ஆடிப்போயிட்டாங்களே!
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் டாப் ஆங்கிள் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. நெட்டிசன்கள் இடையே இந்த புகைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் இது. இரவு நேரத்தில் முழு வெளிச்சத்தில் கிளாம்பாக்கம் பிரம்மாண்டமாக மின்னும் காட்சிகள் இதில் பதிவாகி உள்ளன. பார்க்கவே ஜெக ஜோதியாக.. பிரம்மாண்டமாக இது காட்சி அளிக்கிறது. நெட்டிசன் ஒருவர் பகிர்ந்த இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது கிளாம்பாக்கம் அருகே அசத்தலான மாற்றங்கள் நடந்து வருகின்றன. அங்கே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதனால் இனி அங்கே பேருந்துகளுக்கு இடையே கிராஸ் செய்ய நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதுவரை கோயம்பேடு வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் கட்டும் பணி தமிழ்நாடு அரசு நிதியில் தொடங்கப்பட்டு உள்ளது.
வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை எதிர்கொள்ளும் ஜிஎஸ்டி சாலையில், புதிய ரயில் நிலையத்திற்கான கட்டிடங்கள் மற்றும் நடைமேடைகள் கட்டுவதற்கான குடிமராமத்து பணி தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய ரயில் நிலையம் தயாராகிவிடும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், கிளாம்பாக்கம் டெர்மினஸை புதிய ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் 450 மீட்டர் நீளமுள்ள ஸ்கைவாக்கிற்கான பணி இறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் ஸ்கைவாக் கட்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்துவதற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. புதிய ரயில் நிலையத்தின் கட்டுமானச் செலவுக்காக, தெற்கு ரயில்வேக்கு, 20 கோடி ரூபாயை, மாநில அரசு ஏற்கனவே மாற்றியது குறிப்பிடத்தக்கது.
பேருந்து நிலையம்; சென்னை உள்ளே வராமல் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தோடு இந்த பேருந்துகள் நிற்கும். முக்கியமாக கோயம்பேடு வரை இந்த பேருந்துகள் வராது. சென்னை உள்ளே வர இனி நீங்கள் வேறு பேருந்து பிடித்துதான் வர வேண்டும். இது தனியார் பேருந்துகளுக்கு பொருந்தாது.
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய பேருந்துகள் இனி எந்தந்த வகையில் இங்கிருந்து இயங்கும் என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை இன்றைக்கு கோயம்பேட்டிலிருந்து இயங்குகின்ற பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தெற்கு பகுதிக்கு செல்லும்.
எங்கே செல்லும்?: பெங்களூர், கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயங்கும். அதேபோல தென் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற பேருந்துகள் அத்தனையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முதல் பேருந்து நாளை காலை 4 மணி அளவிலே கோயம்பேட்டிற்கு வரும். அதற்குப் பிறகு வருகின்ற அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தான் வரும்.
எப்படி இயங்கும்: கோயம்பேட்டிற்கு செல்லாது. எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை முழுமையாக நாளையிலிருந்து கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயங்கும். சாதாரண நாட்களில் 300 புறப்பாடுகளும், வார இறுதி நாட்களில் 360 புறப்பாடுகள் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினுடைய பேருந்துகள் அத்தனையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.
அதேபோல, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் டிசம்பர் 31-ஆம் தேதி காலையிலிருந்து சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிற பேருந்துகளை தாண்டி, கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
மாநகர போக்குவரத்துக் கழகம்: மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இங்கிருந்து (கிளாம்பாக்கம்) 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லும்.
அதேபோல தாம்பரம் செல்கின்ற பேருந்துகள் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு புறப்படும். இங்கிருந்து (கிளாம்பாக்கம்) கிண்டிக்கு செல்லும் மாநகர போக்குவரத்து பேருந்துகள் மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இயக்கப்படும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 2386 நடை பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கூடுதலாக 1691 நடை பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. எனவே, மொத்தம் 4077 நடைகள் கிளாம்பாக்கத்தின் இந்த வழித்தடத்திலே இயக்கப்படும்
ஈசிஆர் வழி தவிர மற்ற வழிகளில் சென்னைக்கு கீழே பேருந்துகள் எங்கே சென்றாலும் அந்த பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வழியாக மட்டுமே செல்லும்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications