"ஆடு பகை குட்டி உறவா".. சீசீ.. என் அப்பா கூட இல்லை.. "அக்கா" கனிமொழி இருந்தாங்க.. உருகிய பாஜக சூர்யா

கனிமொழி எம்பி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் பாஜகவின் திருச்சி சூர்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனிமொழியை நான் அக்கா என்றுதான் சொல்வேன்.. என் அப்பா கூட அன்னைக்கு என்னுடன் இல்லை, ஆனால், அக்கா இருந்தாங்க என்று பூரித்து சொல்கிறார் தமிழக பாஜகவின் திருச்சி சூர்யா.

திருச்சி சூர்யா ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அப்போது, 2ஜி வழக்கு மற்றும் குக செல்வம், டாக்டர் சரவணன் போன்றோரெல்லாம் பாஜகவில் இருந்து திமுகவுக்கு வந்துவிட்டார்களே, இதற்கு என்ன காரணம்? என்பது குறித்தெல்லாம் கேள்விகளை முன்வைத்தோம்.

அதற்கு திருச்சி சூர்யா நீண்ட விளக்கத்தை சற்று காட்டமாகவே தெரிவித்துள்ளார்.. மேலும், ஆ.ராசாவையும் அளவுக்கு அதிகமாகவே விமர்சித்து பேசியிருந்தார். அதற்கு திருச்சி சூர்யா அளித்த பதில்கள்தான் இவை

 புது புது போஸ்டிங்ஸ்

புது புது போஸ்டிங்ஸ்

"கேஸ் தன் மீது இல்லாமல் இருக்க வேண்டும், கையில் கொள்ளை அடித்ததை வைத்து பிழைத்து கொள்ள வேண்டும் என்றால், திமுகவுக்குதான் செல்ல வேண்டும்.. வேறு எங்கும் அல்ல.. குற்றம்சாட்டப்பட்டு, இன்னமும் அந்த கட்சியில் அங்கீகார பதவியில் நிறைய பேர் திமுகவில் உள்ளனர்.. செல்வ கணபதி போன்றோரெல்லாம் இன்னும் பெரிய போஸ்டிங்கில்தான் இருக்கிறார்.. முன்னாள் அமைச்சர் இந்திர குமாரியும் பொறுப்பில் இருக்கிறார்.. செந்தில் பாலாஜி பற்றி இதே திமுகவில் என்னென்னெ பேசினார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.

 23+ கேஸ்கள்

23+ கேஸ்கள்

இன்றைக்கு அவர் அமைச்சராக இருக்கிறார்.. இதே கேன் என் நேரு மீது 23 கேஸ் போட்டிருந்தாங்க, சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் இன்னமும் இருக்கு.. அதேபோல, 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ ராசா இருவர் மீதும் மேல்முறையீடு இன்னமும் உள்ளது.. இப்படி எத்தனையோ பேர் அங்கே இருக்கிறார்கள்.. ஆனால், குக செல்வமும், சரவணனும் பாஜகவுக்கு வந்தபோது, சிட்டிங் எம்எல்ஏ என்ற அடையாளத்துடன் வந்தனர்.. சரவணனுக்கு நிறைய செய்தது பாஜக..

 கனிமொழி

கனிமொழி

அவர் இங்கே வந்ததுமே தேர்தலில் போட்டியிட சீட் தந்தாங்க.. மாவட்ட தலைவராக உயர்த்தினார்கள்.. குக செல்வத்துக்கும் மாநில துணை தலைவர் பதவி தந்தாங்க.. ஆனாலும், செயல்திறன் என்ற ஒன்று தேவை இல்லையா? இவர்கள் எல்லாம் ஸ்டாலின் குடும்பத்தையே சுற்றி சுற்றி வந்து பணம் வாங்கின கும்பல்.. ஆனால் பாஜகவில் அப்படி இல்லை.. கட்சியை வளர்க்க வேண்டும்.. அதற்காக உழைக்க வேண்டும்.. அந்த சக்தி இல்லாததால் இதுபோன்றவர்கள் அவர்களாகவே விருப்பப்பட்டு பாஜகவில் இருந்து கிளம்பி விடுகிறார்கள்..

 வைகோ + பகடைகாய்

வைகோ + பகடைகாய்

வைகோ ஒரு மேடைப்பேச்சில் சொன்னார்.. "2ஜி ஊழல் நடந்தது உண்மை, ஆனால், கனிமொழிக்கும் 2ஜிக்கும் சம்பந்தம் இல்லை.. கனிமொழியை பகடை காயாக பயன்படுத்தி கொண்டார்கள்" என்றார்.. அன்று வைகோ சொன்ன அதே கருத்துதான், கனிமொழி அக்கா விஷயத்தில் என்னுடைய நிலைப்பாடும். அக்கா என்று அழைப்பதால், திமுகவுக்கு நான் மறுபடியும் போவேனா என்று கேட்கிறீர்கள்.. ச்சீசீ.. அந்த கட்சியில் நான் இருந்தேன்.. கனிமொழியை நான் அக்கா என்றுதான் சொல்வேன்.. அந்த குடும்பத்தில் ஒருவனாக என்னை வைத்திருந்தார் அக்கா..

 அக்கா கனிமொழி

அக்கா கனிமொழி

எனக்கு கல்யாணம் செய்து வைத்தது அவர்தான்.. என் பையனுக்கு பேர் வைத்தது அவர்தான்.. என் பையனுக்கு முதல் பிறந்தநாளக்கு வந்து, 4 மணி நேரம் எங்களுடன் இருந்தார்.. என் அப்பாகூட அன்னைக்கு என்கூட இல்லை.. ஆனா, அக்கா இருந்தாங்க.. அப்படியான சூழலில் உணர்வாய் அன்று இருந்தோம்.. 10 வருஷம் நெருக்கமாய் கட்சியில் அவருடன் பயணித்துள்ளோம்.. பாஜகவுக்கு வந்துவிட்டோம் என்பதற்காக, எல்லாரையும் பேசுவது போலவெல்லாம் அவரையும் பேசிடக்கூடாது.. 2ஜி விஷயத்தில் ராசாவை விடமாட்டோம்.. ஆனால், கனிமொழி விஷயத்தில், வைகோ கருத்துதான் என்னுடைய கருத்தும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+