"ஹைஜாக்".. பிரம்மாஸ்திரத்தை எடுத்த எடப்பாடி பழனிசாமி.. ஓபிஎஸ் இப்பதான் நிம்மதியானாரு.. அதுக்குள்ள இடி
எடப்பாடி பழனிசாமியின் அடுத்த பிளானால் ஓபிஎஸ் டீம் அப்செட் ஆகி உள்ளதாம்
சென்னை: அதிமுகவுக்கு யார் தலைமை என்பதில் இரு தலைவர்களுக்கு இடையே போட்டா போட்டி நடந்துகொண்டிருக்கும் நிலையில், இருவருமே ஆளுக்கு ஒரு புது ரூட்டை பிடித்துள்ளனர்.
ஒவ்வொரு கோர்ட் உத்தரவு முடிவுகளும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே வந்துகொண்டிருந்த நிலையில், இன்றைய தினம் சுப்ரீம்கோர்ட் உத்தரவானது, எடப்பாடிக்கு பின்னடைவை தந்துள்ளது.
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு குறித்து விளக்கமளிக்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது...

டைம் ஓவர்
முக்கியமாக, தன் பலத்தை வைத்து, நிரூபித்து விடலாம் என்பதே எடப்பாடியின் பிளானாக இருந்து வந்தது.. ஆனால், யாருக்கு மெஜாரிட்டி என்பதை ஆய்வுசெய்ய போவதில்லை என்பதை உச்சநீதிமன்றம் இன்று திட்டவட்டமாக கூறியுள்ளது. இது எடப்பாடிக்கு சறுக்கலாகவும், ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.. அதாவது மெஜாரிட்டி ஆதரவாளர்கள் மட்டுமே எடப்பாடி பழனிசாமியின் ஒரே பலமாக இப்போதுவரை இருந்து வரும் நிலையில், எவ்வளவு ஆதரவாளர்கள் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள் என்பதை நீதிமன்றம் இனி ஒருபோதும் கணக்கில் எடுத்துக் கொள்ளாது.. சட்டத்துக்கு தேவை விதிமுறைகள்தான்.. அந்த விதிமுறைகள் சரியாக இல்லாத பட்சத்தில், நடவடிக்கைகள், உத்தரவுகள் பாயும் என்பதே தற்சமய நிலைமையாக உள்ளது.

முப்பரிமாணம்
எனினும், எடப்பாடி பழனிசாமி இடிந்துபோய்விடவில்லை.. இன்னொரு அஸ்திரத்தை உடனே கையில் எடுத்துவிட்டார்.. முதலாவதாக, அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்தி விட்டாராம்.. இரண்டாவதாக, ஓபிஎஸ் தரப்பில் உள்ள சிலரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளிலும் எடப்பாடி பழனிசாமி அணியினர் ஈடுபட்டுள்ளனராம்.. மூன்றாவதாக, அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை தயாரிக்கும் பணியில் சத்தமில்லாமல் இறங்கிவிட்டார்களாம்.. இந்த அடையாள அட்டையை பொறுத்தவரை, அனைத்து உறுப்பினர்களுக்கு எம்ஜிஆர் காலத்தில் முழுமையான அளவில் அடையாள அட்டை வினியோகம் செய்யப்பட்டது... பிறகு, ஜெயலலிதா பொறுப்பேற்றபோது, அவரது போட்டோ அச்சிடப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

நியூ ஃபேஸ்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் + எடப்பாடி இருவரின் போட்டோவும் சேர்க்கப்பட்ட புதிய அடையாள அட்டை தயாரிக்கப்பட்டது... இந்த அட்டையைதான் கடந்த நாலரை வருடங்களாக உறுப்பினர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்... ஆனால், ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து எடப்பாடி நீக்கிவிட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை அவர் இழந்துள்ளார். இதனால், அவர் போட்டோ இல்லாத, புதிய அதிமுக அடையாள அட்டை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.. அந்த வேலைதான் இப்போது மும்முரமாகி உள்ளதாம்..

ID CARDS
ஆனால், இந்த போட்டோவில் ஓபிஎஸ் படம் இல்லை.. எடப்பாடி பழனிசாமி படம் மட்டுமே அதில் இடம்பெற்று உள்ளது... லட்சக்கணக்கில் இந்த அடையாள அட்டையை தயாராகி, விரைவில் அச்சடிப்பு பணிகள் முடிக்க போகிறார்களாம்.. அதற்கு பிறகு, மாவட்ட வாரியாக அடையாள அட்டைகள் பிரித்து, அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.. அடுத்த பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு முன்பே, எல்லாருக்கும் இந்த புதிய அடையாள அட்டைகளை வழங்க ஆலோசித்து வருகிறார்கள்.

பொதுச்செயலாளர்
அடுத்த மாதம் 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை உள்ளதால், அந்த தீர்ப்பு வந்த பிறகுதான், புதிய உறுப்பினர் அடையாள அட்டை வினியோகம் செய்யப்படும் என்கிறார்கள்.. ஓபிஎஸ் டீமில் உள்ள யாருக்குமே அந்த புதிய உறுப்பினர் அடையாள அட்டையை தரப்பட மாட்டாது என தெரிகிறது.. அப்படியானால், உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்வில் கலந்துகொண்டு வாக்கு அளிக்க முடியும் என்பது இயல்பாகிவிடுகிறது.. அதனால்தான், அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி சத்தமேயில்லாமல் நடந்து கொண்டிருக்கிறதாம்.

அதிர்ச்சி
ஆனாலும் இந்த விஷயம் தெரிந்து ஓபிஎஸ் அதிர்ச்சியில் உள்ளாராம்.. காரணம், புதிய உறுப்பினர் அடையாள அட்டை வினியோகம் மூலம் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே செல்ல வாய்ப்பு உள்ளதால், என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறாராம்.. இது தொடர்பாக சட்ட ஆலோசர்களையும் கலந்து பேசி வருகிறார்.. இன்னொரு பக்கம், சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்கலாமா? என்றும் ஆலோசித்து வருகிறாராம்...!

கார்டுகள்
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு, சுப்ரீம் கோர்ட்டு தங்களுக்கு அனுமதி வழங்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனராம்.. இதற்கு காரணம், புதிய சட்ட வல்லுநர்களின் உதவியை எடப்படி தரப்பு நாடியுள்ளதாம்.. இவர்கள் எப்படியும் தமக்காக வாதாடி, வலுவான பாயிண்ட்டை முன்வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.. ஒருபக்கம் ஏற்கனவே, பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்திட்ட லிஸ்ட் ரெடியாகிவிட்ட நிலையில், அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல் கசிந்தது.. மெஜாரிட்டி உறுப்பினர்கள் எவ்வளவு பேர் இருந்தாலும் அதை நீதிமன்றம் பரிசீலிக்காத பட்சத்தில், உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை தயாரிக்கும் பணியும் நிறைவடைந்துவிட்டால், அது தங்களுக்கு கைகொடுக்கும் என்று எடப்பாடி தரப்பு நம்புகிறதாம்..
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications