சைதாப்பேட்டை அரசு பயிற்சி மையத்தில் 34 பேருக்கு கொரோனா.. மாணவர்கள் உடல்நிலை எப்படி உள்ளது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் அமைந்துள்ள அரசு மாதிரி பள்ளியில் ஒரே நாளில் 34 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    சென்னையில் அதிகரிக்கும் கொரோனா... மத்திய அரசு எச்சரிக்கை!

    இந்தியாவில் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டில் பல வாரங்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தைத் தண்டியுள்ளது.

    தமிழ்நாட்டிலும் கூட கிட்டதட்ட அதே நிலைதான். கொரோனா பாதிப்பு மாநிலத்தில் மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    இதன் காரணமாக கொரோனா கட்டுப்பாடுகள் தமிழ்நாட்டில் வரும் ஜன.10ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு 10-ம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகள், இறைச்சிக் கடைகள், அலகு நிலையங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    சென்னை

    சென்னை

    வைரஸ் பாதிப்பு வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என்பதால் தமிழக அரசு கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாகச் சென்னையில் கடந்த 2 வாரங்களாகவே வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. அதன்படி சென்னையில் கொரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

     அரசு பயிற்சி மையம்

    அரசு பயிற்சி மையம்

    சென்னை சைதாப்பேட்டையில் அரசுக்குச் சொந்தமான சிறப்புப் பயிற்சி மையம் உள்ளது. இங்கு தான் நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு மாநில அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த வளாகத்தில் உள்ள விடுதியிலேயே தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில். இங்குப் படித்து வந்த சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிக்காக்காக வீட்டிற்குச் சென்று திரும்பியுள்ளார்.

     34 பேருக்கு கொரோனா

    34 பேருக்கு கொரோனா

    அவருக்குக் கடந்த 28ஆம் தேதி சளி, காய்ச்சல் ஏற்பாடுள்ளது. இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாகப் பயிற்சி மைய விடுதியில் உள்ள 71 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நேற்று வரை மட்டும் கிடைத்த பரிசோதனை முடிவில் மொத்தம் 24 மாணவர்கள், 10 மாணவிகள் என மொத்தம் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

     அடுத்து என்ன

    அடுத்து என்ன

    அவர்கள் அனைவரும் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 34 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவ, மாணவிகளின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கொரோனா உறுதியானவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் நலமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+