தொட்டுட்டீங்க ரஜினிகாந்த்தை.. மொத்தமாக டேமேஜ் ஆயிட்டாரு ஜோசப் விஜய்.. போட்டு தாக்கிய அர்ஜுன் சம்பத்
சென்னை: தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களாகக் கருதப்படும் ரஜினிகாந்த் மற்றும் விஜய் இடையிலான போட்டி, தற்போது அரசியல் களத்திலும் ஒரு வெளிப்படையான மோதலாக உருவெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அர்ஜுன் சம்பத் சொல்லியிருக்கும் கருத்துக்கள் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் புள்ளியான ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் குறித்துத் தெரிவித்த சில கருத்துக்கள் ரஜினி ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது..

ரஜினி - தவெக தலைவர் விஜய்
இந்த விவகாரம் அரசியல் ரீதியாகப் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்குத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்ததோடு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்த துவங்கிவிட்டார்கள்.
பொதுவாகத் தன் மீதான விமர்சனங்களைக் கடந்து செல்லும் ரஜினிகாந்த், கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கருத்துக்களைப் பகிர்வதைத் தவிர்த்து வந்தார். இருந்தாலும் தற்போதைய சூழலில் தனக்காக குரல் கொடுத்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கையை 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளார்.
காலம் பதில் சொல்லும்
இந்த அறிக்கை சோஷியல் மீடியாவில் மிக வேகமாகப் பரவி வருவதோடு, விஜய் தரப்புக்கு ரஜினிகாந்த் மறைமுகமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருப்பதாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
நீண்ட காலமாகவே விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும், அந்தஸ்து ரீதியாகவும் யார் பெரியவர் என்ற போட்டி நிலவி வந்தது. விஜய்யின் பட வசூல் ரஜினியின் சாதனைகளை முறியடிப்பதாக விஜய் ரசிகர்கள் வாதிட்டு வந்த நிலையில், ரஜினி ரசிகர்கள் அதனைத் தொடர்ந்து எதிர்த்து வந்தனர்.
ஆனால் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, அவரது கட்சியினர் தேவையற்ற முறையில் ரஜினியைச் சாடிப் பேசுவது ஒரு வழக்கமாகவே மாறியிருந்தது. இந்தத் தொடர் சீண்டல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே ரஜினியின் இந்த அறிக்கை அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
ரஜினிகாந்த் - விஜய்
சட்டசபைத் தேர்தலை முதன்முறையாக சந்திக்கத் தயாராகி வரும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு, ரஜினியின் இந்த எதிர்வினையும், பிற அரசியல் தலைவர்களின் கண்டனமும் ஒரு பின்னடைவாகவும் அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது.
ரஜினியின் இந்தத் தெளிவான நிலைப்பாடு, விஜய் கட்சியினருக்கு ஒரு எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. இனி ரஜினிகாந்த் பற்றி அவதூறாகவோ அல்லது தேவையில்லாமலோ விமர்சிப்பவர்களுக்குத் தகுந்த பதிலடி கிடைக்கும் என்பதை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உறுதிபடத் தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் கோலிவுட்டில் நிலவிய பனிப்போர் தற்போது நேரடி அரசியல் மோதலாகவே மாறிவிட்டது.
அதிலும் "காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" என்ற ரஜினியின் வரிகள் வருங்காலத் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அர்ஜுன் சம்பத் - ஜோசப் விஜய் பற்றி பேட்டி
இப்படிப்பட்ட சூழலிதான் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத்தும், தன்னுடைய ஆதரவை ரஜினிகாந்துக்கு தெரிவித்துள்ளார்.. பழனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ஜோசப் விஜய்யின் கட்சிக்கு ரொம்ப கெட்ட பெயராகி விட்டது. கரூர் நெரிசல் மரணங்கள், அவரது குடும்ப விவகாரம் போன்றவையால் பெயர் கெட்டுவிட்டது.
மனைவியை வொர்த் இல்லை என்று கூறியது, குடும்ப பெண்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பொது இடங்களில் ஒழுங்கீனமாகவும், பைத்தியகாரத்தனமாகவும் நடக்கும் ஜோசப் விஜய் கட்சியின் தொண்டர்களால் அக்கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து விட்டது.
டெபாசிட் கிடைக்காது
அதன் உச்சகட்டமாக ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனாவின் விமர்சனம், தவெகவின் செல்வாக்கையே மொத்மாக குறைத்து விட்டது. 234 தொகுதிகளிலும் தவெக டெபாசிட் வாங்க போவது கிடையாது.. ஓட்டை பிரிக்கும் வேலையைத்தான் தவெக செய்கிறது. அதே வேலையைத்தான் சீமானும் செய்கிறார்.
திமுகவிற்கு மாற்று அதிமுகதான் என்ற நிலையே இப்போதைய தேர்தலில் உருவாகி உள்ளது. சீமானின் தேர்தல் அறிக்கைகள் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிரானது" என்றும் கருத்து கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications