6 தொகுதிகளில் ‘அக்னி பரீட்சை’.. நெக் டு நெக் ஃபைட்டாம்! வெல்லப்போவது யார்? தந்தி டிவி சர்வே ரிசல்ட்!
சென்னை: தந்தி டிவி கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் 6 லோக்சபா தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த 6 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தும் கட்சியே வெல்லும் என்ற நிலை உள்ளதாம்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தந்தி டிவி, கடந்த ஆண்டு மே மாதம் முதல் பல தரப்பட்ட மக்களிடையே எடுத்த கருத்துக் கணிப்புகள் 2024 பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. அந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 6 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் போட்டி நிலவும் தொகுதிகள்:
சிவகங்கை
தேனி
பொள்ளாச்சி
கோவை
சிதம்பரம்
வேலூர்

அமமுக + ஓபிஎஸ் பிரிக்கும் வாக்குகள்: இந்த 6 தொகுதிகளிலும் கடுமையான போட்டி நிலவும் என தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. சிவகங்கை, தேனி மாவட்டங்களைப் பொறுத்தவரை டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ் தரப்பு ஆகியவை பலமாக உள்ளதால், கட்சிகளுக்கு வாக்குகள் பெருவாரியாகப் பிரியும். எனவே, கடுமையான போட்டி நிலவும், குறைந்த வாக்குகளில் வெற்றி இருக்கக்கூடும் என இந்த கணிப்பு ரிசல்ட் தெரிவிக்கிறது.
கோவை தொகுதியில் விஐபி வேட்பாளர்கள் நிற்கக்கூடும் என்ற நிலை இருக்கிறது. கமல்ஹாசன் நின்றால் எதிர் கட்சிகளிலும் பெரிய வேட்பாளர்கள் நிறுத்தப்படக் கூடும் என்பதால் போட்டி கடுமையாகிறது. ஏற்கனவே அதிமுகவுக்கு பலமான தொகுதி என்பதால், இங்கு போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிதம்பரம், வேலூர் தொகுதிகளில் சாதி மற்றும் மதம் முக்கிய பங்கு வகிக்கலாம் என்றும், அயோத்தி ராமர் கோவில் விவகாரம் மற்றும், பாஜக சின்னத்தில் ஏசி சண்முகம் போட்டியிடுவது ஆகிய காரணங்களால் கடும் போட்டி நிலவலாம் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications