Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர் திடீர்னு உருளுதாம் - சாயுதாம்.. சென்னைல "பேய்" இருக்காமே, பாத்தீங்களா.. "அமானுஷ்ய" ஸ்பாட்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழில்நுட்பங்கள், வண்ண வண்ண மால்கள், என மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்னை சென்று கொண்டிருக்கிறது.. எந்நேரமும் பரபரப்பும், பிஸியுமாய் காணப்படும் சென்னையில், மக்களை பயமுறுத்தும் இடங்களும் இருக்கிறதாம்.

பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சென்னைக்கு பெருமை என்றாலும், யாருமே செல்ல முடியாத சில அமானுஷ்யமான இடங்களும் தலைநகரில் இருக்கத்தான் செய்கிறதாம்.

சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள் என்பதுபோல, பார்க்க கலங்கும் திகில் இடங்களும் உண்டு என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. திரில்லிங் அனுபவம் வேண்டும் என்பவர்கள் இங்கு சென்று வருவதாகவும் தெரிகிறது.

 Tour chennai: most haunted places in chennai and spots in chennai that should not be visited alone

உடைந்த பாலம்: அடையாறு ஆற்றின் மேல் உள்ள பாலம்.. 1967ல் இந்த பாலத்தை கட்டியிருக்கிறார்கள்.. பல வருடங்களாக, பொதுமக்களும் இந்த பாலத்தை இயல்பாகவே பயன்படுத்தி வந்தனர். ஆனால் அடுத்த 10 வருடத்தில், அதாவது 1977-ம் ஆண்டு, திடீரென ஒருநாள் கடல் கொந்தளித்தது.. இதில், பாலம் இடிந்து நொறுங்கியது.. அதன் பிறகு இந்த பாலத்தில் நிறைய மர்மங்கள் நடப்பதாக சொல்கிறார்கள்.. நைட் நேரத்தில், ஏதேதோ சத்தம் கேட்பதாகவும், ஆவிகள் நடமாட்டம் இருப்பதாகவும், சொல்கிறார்கள்.

டிமான்டி காலனி: இதை வைத்து ஒரு சினிமாவே எடுக்கும் அளவுக்கு, அமானுஷ்யம் நிறைந்த இடம் இது.. அபிராமிபுரம் நகருக்கு அருகில், இந்த டிமான்டி காலனி இருக்கிறது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு, டிமான்டி என்பவர், தன்னுடைய மனைவியுடன் இங்கு வாழ்ந்ததாக சொல்கிறார்கள்.. அந்த மனைவிக்கு மனநலம் சரியில்லாமல் இருந்திருக்கிறது..

அப்போது டிமான்டியின் குழந்தையும் மர்மமாக இறந்துள்ளது.. இதற்கு பிறகு, இன்னும் நிறைய இனம்புரியாத சம்பவங்கள் அந்த காலனியில் நடந்ததாகவும், அதற்கு பிறகு, மக்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்வதில்லை என்றும் சொல்கிறார்கள். செயின்ட் மேரி சாலையிலிருந்து வலதுபுறம் அமைந்துள்ள இந்த காலனியில் நிறைய மரங்களும், பாழடைந்த வீடுகளும் வரிசையாக இரண்டு பாதைகளில் உள்ளன..

ப்ளூ கிராஸ் ரோடு: இங்கேயும் பேய் நடமாட்டம் இருப்பதாக நம்பப்படுகிறது.. இந்த இடத்தில் நிறைய தற்கொலைகள் நடந்திருக்கிறதாம்.. அதனால், இந்த இடத்தில் ஆவிகள் நடமாடுவதாக சொல்கிறார்கள்.. இங்குள்ள அடர்த்தியான மரங்களை பார்ப்பதற்கே திகிலாக இருக்குமாம்.. அதுமட்டுமல்ல, நைட் நேரத்தில், சாலையின் குறுக்கே மனிதர்களை போன்ற வெள்ளை உருவங்கள் நடமாடுவதாகவும் சிலர் சொல்கிறார்கள்.. அதனாலேயே சிலர், இரவு நேரத்தில் இந்த சாலையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கிறார்களாம்.

 Tour chennai: most haunted places in chennai and spots in chennai that should not be visited alone

கரிக்காட்டுக்குப்பம்: இது ஒரு மீனவ குப்பம்.. கடந்த 2004-ல் சுனாமி வந்தபோது, எத்தனையோ மீனவ கிராமங்கள் மூழ்கிவிட்டன.. அதில், ஒரு பேரலை இந்த கிராமத்தையும் முழுமையாக அழித்துவிட்டது.. பலர் காவு வாங்கப்பட்டன.. அந்த சம்பவத்திற்கு பிறகு இறந்து போனவர்கள் ஆவியாக இந்த இடத்தையே சுற்றி சுற்றி வருவதாக சொல்கிறார்கள்..

விநோத சத்தங்கள்: மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியின் நடைபாதையும் மர்மத்துக்குரிய இடமாக கருதப்படுகிறது.. கல்லூரி மாணவி இங்குள்ள வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டாராம்.. விசித்திரமான சிரிப்புகள், விநோதமான சத்தங்கள், கேட்குமாம்.. மூடப்பட்டிருக்கும் குழாய்கள் தானாகவே திறக்கும் சத்தம் கேட்டதாம்..

பன்னாட்டு ஐடி நிறுவனம், சோழிங்கநல்லூர்: 1980களில் இந்த இடம் ஒரு பெரிய சுடுகாடாக இருந்ததாம்.. இங்குதான், பிரபல ஐடி நிறுவனம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது... நைட் நேரத்தில், பல ஊழியர்கள் வெள்ளை கலரில் உருவங்களை பார்த்ததாக சொல்லப்படுவதுண்டு.. இங்கிருந்த சில செக்யூரிட்டிகள், நைட் நேரங்களில் பேய் உருவத்தை பார்த்து, மூர்ச்சையாக கீழே விழுந்து ஜூரம் வரும் அளவிற்கு போய்விட்டார்களாம்.

சென்னை விமான நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சாலை, வால்மீகி நகருக்கும் ஒரு கதையை சொல்கிறார்கள்.. இங்குள்ள ஒரு வீட்டில் இளம்பெண்ணின் ஆத்மா உலாவுகிறதாம்.. இந்த வீட்டிற்கு அருகில் வசிக்கும் பலருக்கும் ஒரு சிறு பெண்ணின் அழு குரல் கேட்டுக்கொண்டே உள்ளதாம். இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், கூகுள் கூட இந்த குறிப்பிட்ட வீட்டை, திகில் வீடு என்று தான் குறித்துக்காட்டுவதுதான்..!!!

கிழக்கு கடற்கரைச் சாலை, அண்ணா மேம்பாலம் மற்றும் பெசன்ட் சாலை ஆகியவை சென்னையில் பேய் நடமாட்டம் உள்ளதாக சொல்கிறார்கள்.. மேற்கூறப்பட்ட இடங்கள் சென்னையில் இன்றுவரை மர்மமாகவே உள்ளன.. அதற்கேற்றார்போல், மக்கள் நடமாட்டமும் பெரிதாக காணப்படுவதில்லை..

பேய் இருக்கா? இல்லையா?: இறந்தவர்கள் ஆத்மாவாக, நடமாடுவதாக காலம் காலமாக சொல்லப்பட்டே வருகின்றன.. அப்படிப்பார்த்தால் உலகம் முழுக்க இறப்புகள், ஏதாவதொரு இடத்தில் நொடிக்கு நொடி நடந்து கொண்டுதான் இருக்கிறது..

என்றாலும், மேற்குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இறந்தவர்கள் பேயாக உலாவுவதாக சொல்லப்படுவதன் காரணம் என்ன? என்பதும் தெரியவில்லை.. பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற ஆராய்ச்சி பல்வேறு வருட காலமாகவே உலகளவில் நடந்து கொண்டேயிருக்கிறது என்றாலும், மேற்குறிப்பிட்ட இடங்களில் பெரும்பாலானவை இப்போதுவரை வெறிச்சோடியே கிடப்பதுதான், இப்படியான கட்டுக்கதைகளுக்கு அடித்தளமிட்டு கொண்டிருக்கிறது.. அத்துடன், கொள்ளைக்காரர்களுக்கும் வசதியாகி கொண்டிருக்கிறது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+