ராமர் பாலத்தில் 1 கி.மீ. தூரம் வாக்கிங் செல்லலாம்! நாகை டூ இலங்கை காங்கேசன் கப்பலில் ஏற்பாடு
ராமேஸ்வரம்: ராமர் பாலத்தில் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தரிசிக்கும் வகையில் ஆன்மீக, கலாச்சார சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது. இந்த அறிவிப்பை நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கும் சுபம் என்ற தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் அறிவித்திருந்தார்.

நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இதை தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பயண கட்டணத்தை குறைத்துள்ளது அந்த நிறுவனம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
நல்ல வரவேற்பு
இதற்கு பயணிகள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். தற்போது இந்த கப்பலில் நாகை டூ இலங்கைக்கு இரு வழி கட்டணமாக ஒரு நபருக்கு ரூ 8500 வசூலிக்கப்படுகிறது. அது போல் பயணிகள் தங்கள் உடமைகளாக 10 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
குறைந்த கட்டணம்
இந்த நிலையில் கப்பல் போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தை அந்த நிறுவனம் அளித்துள்ளது. அதாவது நாகையிலிருந்து இலங்கை காங்கேசனுக்கு செல்ல ரூ 500 குறைத்து, ரூ 8000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
22 கிலோ எடை இலவசம்
மேலும் பயணிகள் தங்களது உடமைகளாக 7 கிலோ ஹேண்ட் பேக் எடையாகவும், 15 கிலோ செக் இன் எடையாகவும் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கவுள்ளோம். இது மட்டும் 15 ஆயிரத்திற்கு 2 இரவுகள் பயணம் உள்பட 3 நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம், ரூ 30ஆயிரத்திற்கு 5 இரவுகள் 6 நாட்கள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ராமர் பாலம்
சுற்றுலா பேக்கேஜ் மூலம் ராமர் பாலத்தை நேரடியாக பார்வையிடவும், அதில் நடந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பேக்கேஜ் திட்டத்தில் இருவழி பயண கட்டணம், தங்கும் வசதி, போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்படும்.
இலங்கை காங்கேசன் துறைமுகம்
அது போல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் ஜூலை 15ஆம் தேதி வாக்கில் இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புகள் உள்ளன.
பயணிகள் கப்பல்
அது போல் மே 2ஆவது வாரத்தில் 2ஆவது பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. 250 இருக்கைகளில் 220 எக்கனாமிக் இருக்கைகளும், 20 பிசினஸ் இருக்கைகளும், 10 சூட் ரூம்கள் வசதியும் இருக்கும். வடகிழக்கு பருவமழை காலங்களில் கப்பல் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
கப்பல் போக்குவரத்து
ஆனால் இந்த 2ஆவது கப்பல் போக்குவரத்தானது புயல் சின்னம் உருவாகும் காலத்தை தவிர்த்து, ஆண்டு முழுவதும் மற்ற அனைத்து நாட்களிலும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கப்பல் நிறுவனத்தின் இயக்குநர் சுந்தரராஜன் கூறுகையில், நாகையிலிருந்து காங்கேசன் துறைமுகம் வரை பிப்ரவரி 22ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் பயணிகள் கப்பல் இயக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சிறப்பம்சம்
கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. பேக்கேஜ்களில் சிறப்பம்சமாக ராமர் பாலத்தில் ஒரு மணி நேரம் நடந்து செல்லலாம். ராமாயணத்துடன் தொடர்புடைய முக்கிய இடங்களை பார்வையிடும், கலாச்சார ஆன்மீக சுற்றுலாவாக இது இருக்கும்.
ஜூலை 2ஆவது வாரம்
ஜூன் 1 முதல் 250 பேர் பயணிக்கும் வகையில் புதிய கப்பல் இயக்கப்படவுள்ளது. 3 மணி நேரத்தில் காங்கேசன் துறைமுகத்தை சென்றடையலாம். ஜூலை 2ஆவது வாரத்தில் இருந்து இலங்கைக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தும் தொடங்கவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications