“சீமானை எங்குமே நுழைய விடமாட்டோம்”.. பெரியார் குறித்து பேசிய சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தபெதிக
சென்னை: தந்தை பெரியார் குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னையில் இன்று சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றனர். சீமானை எந்த இடத்திலும் நுழைய விட மாட்டோம் என தபெதிக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
தந்தை பெரியாரை பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அவதூறான கருத்தை பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிட கழகம் அறித்திருந்தது.

அதன்படி தபெதிகவினர் 50க்கும் மேற்பட்டோர் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை நோக்கிச் சென்றனர். சீமான் வீட்டுக்கு செல்லும் பாதையில் 200 மீட்டருக்கு முன்பு பேரிகார்டுகள் அமைத்து போலீசாரால் தபெதிகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, சீமானுக்கு எதிராக தபெதிக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் முழக்கம் எழுப்பினர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட வந்த தபெதிக-வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை அருகில் உள்ள சமூதாயக் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தபெதிக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், "தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் சீமான், பெரியாரை பற்றியும், பெண்களை இழிவுபடுத்தியும் சீமான் பேசி இருக்கிறார். அவரது பேச்சு எந்தவித ஆதாரமும் அற்றது. அவர் ஒரு கீழ்த்தரமான செய்தியை பெரியார் சொன்னதாக சொல்கிறார். அதற்கு அவர் ஆதாரம் தரவேண்டும்.
பெரியாருக்கு, பெரியார் என பெயர் சூட்டியது பெண்கள். உலகம் முழுவதும் உள்ள பெண்ணிய தத்துவவாதிகள் சொல்லாதவற்றையும் கூட பேசியவர் போராடியவர் பெரியார். அப்படிப்பட்டவரை இழிவு செய்திருக்கிறார். சங் பரிவார் கும்பல் தான் இப்படிப்பட்ட தவறான பிரச்சாரத்தை செய்து வந்தது. அந்தப் பிரச்சாரத்தை நம்பி இப்படி பேசி இன்று தமிழ்நாட்டு மக்களிடத்தில் வசமாக சிக்கி இருக்கிறார் சீமான்.
கடந்த காலங்களில் சங் பரிவார் கும்பல்கள் இதே கருத்தைப் பேசினார்கள். பெரியார் சொன்னதாக விடுதலை நாளேட்டை ஆதாரமாகச் சொன்னார்கள். ஆனால், அதே தேதியிட்ட விடுதலை நாளேட்டையே எடுத்துப் போட்டு அந்த பிரச்சாரத்தை முறியடித்தோம். தொடர்ந்து அவதூறான செய்தியை பரப்பி வரும் சீமான் இனி எந்த இடத்திலும் நுழைய விட மாட்டோம்" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தின்போது நாதக நிர்வாகியின் கார் கண்ணாடியை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உடைத்ததாக புகார் எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications