டி ஆர் பாலு ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர்: மீண்டும் வெற்றி வசப்படுமா?
ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளராகி இருக்கிறார் டி.ஆர்.பாலு.
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் திமுக முதன்மைச் செயலரான டி.ஆர்.பாலு.
திருவாரூர் மாவட்டம் தளிக்கோட்டையைச் சேர்ந்தவர் டி.ஆர்.பாலு (78). பி.எஸ்சி முடித்துள்ள இவர், தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர். ம்னைவி, மூன்று மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

திமுக முதன்மைச் செயலராக உள்ள இவர், கடந்த 1986ல் ராஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக நான்கு முறை தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். 2009ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.யாக தேர்வானார்.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், வெற்றி இவர் வசமாகவில்லை. மத்திய அரசில் இணை மற்றும் கேபினட் அந்தஸ்தில் பதவி வகித்துள்ளார். 2004ம் ஆண்டு முதல் 2009 வரை மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் தற்போது மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக்கப் பட்டிருக்கிறார்.
இத்தொகுதியில் இதுவரை திமுக அதிகபட்சம் 6 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 2 முறையும் வென்றுள்ளன. இந்தத் தொகுதியும் இதுவரை திமுகவுக்கே சாதகமாக இருந்து வந்துள்ளது. இம்முறையும் அதே செண்டிமெண்ட் பலிக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications