டி.ஆர்.பாலு மகனுக்கு திமுக இளைஞரணியில் பதவி...? அடுத்தடுத்து நிகழும் அதிரடிகள்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பதவி தரக்கூடும் எனக் கூறப்படுகிறது.
திமுக இளைஞரணி துணைச் செயலாளராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட செயலாளராக புதிய பயணத்தை தொடங்கவுள்ளதால் அவரது வெற்றிடத்தை டி,ஆர்.பி.ராஜாவை கொண்டு நிரப்பப்பட உள்ளதாம்.
திமுகவில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் வரிசையாக நிகழ்ந்து வருவதால் சீனியர்கள் பலரும் அரண்டு போய் காணப்படுகின்றனர். ஆனால் அதேசமயம் இளைஞர்கள் மத்தியில் ஸ்டாலின் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

வெற்றிடம்
திமுக இளைஞரணி துணைச் செயலாளராக உள்ள அன்பில் மகேஷ்பொய்யாமொழி அரசியலில் தனது அடுத்தக்கட்ட பயணத்தை விரைவில் தொடங்க உள்ளார். திருச்சி மாவட்டச் செயலாளராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டால் திமுக இளைஞரணியில் அவர் வகித்து வரும் மாநில துணைச் செயலாளர் பதவியிடத்திற்கு வெற்றிடம் ஏற்படும். அந்த இடத்தில் மன்னார்குடி எம்.எல்.ஏ.வும் ஆக்டிவ் அரசியல்வாதியுமான டி.ஆர்.பி.ராஜாவை கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் வாரத்தில் கூட இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

மாநில பதவி
திமுக முதன்மைச் செயலாளர் பதவியை தன்னிடம் இருந்து எடுத்துக்கொண்டதால் டி.ஆர்.பாலுவுக்கு சிறியளவில் தலைமை மீது மன வருத்தம் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கூட வழக்கம் போல் உற்சாகத்துடன் கலந்துகொண்டு கலகலப்புடனே பேசிச் சென்றார். ஆனால் முதன்மைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது மனதளவில் பாலுவுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்கிறதாம். இதனிடையே அவரது மகனுக்கு மாநிலப் பொறுப்பு வழங்குவதன் மூலம் டி.ஆர்.பாலுவை ஓரளவு சமாதானம் செய்ய முடியும் என்பது ஸ்டாலின் நம்பிக்கை.

சுறுசுறுப்பு
இதனிடையே இது தொடர்பாக மன்னார்குடியை சேர்ந்த ஐ.டி.விங் நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, டி.ஆர்.பாலு மகன் என்பதற்காக மட்டும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு இளைஞரணியில் பதவி கொடுக்க தலைமை முன்வரவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக ராஜாவின் செயல்பாடுகளை பற்றி நன்கறிந்த பின்னரே தலைவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என நினைக்கிறோம். மனிதர் சுறுசுறுப்பானவர், தொகுதிக்குள் இருந்தால் ஒரு இடத்தில் இருக்கமாட்டார், பம்பரமாக சுழன்றுகொண்டே தான் இருப்பார். அதனால் அவருக்கு இளைஞரணியில் பொறுப்பு கிடைத்தால் அது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியே எனத் தெரிவித்தார்.

மகிழ்ச்சி
டி.ஆர்.பாலுவிடம் இருந்து முதன்மைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது கட்சியில் யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ, தஞ்சை மாவட்டத்தில் பழனிமாணிக்கம் தரப்புக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளதாம். வெடி வெடிக்காத குறையாக கடந்த ஞயிற்றுக்கிழமை அன்று இதனை கொண்டாடினார்களாம் எஸ்.எஸ்.பி. தரப்பினர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ












Click it and Unblock the Notifications