Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு நான் தாழ்ந்து போய்விட்டேனா? டிஆர் பாலு ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அண்ணாமலையெல்லாம் பெரியவரா.. அவருக்கு பதில் சொல்ற அளவுக்கு நான் சீப்பா போய்ட்டேனா.. பார்லிமென்டில் மெயின் கேள்வி எழுப்பியது யார் தெரியுமா? என்று கேள்வி எழுப்பிய திமுக எம்பி டிஆர் பாலு, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின்போது, வெள்ள நிவாரணம் தொடர்பாக திமுக எம்பி ஆ ராசா கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த போது குறுக்கிட்ட மத்திய இணை அமைச்சர் முருகனை, டி.ஆர்.பாலு கடுமையாக சாடினார். அமைச்சராக இருக்கவே எல் முருகன் தகுதியற்றவர் என்று கடுமையாக விமர்சித்தார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தலித் அமைச்சரான முருகனை டிஆர் பாலு அவமதித்து விட்டதாக பாஜக குற்றம்சாட்டியது.

 TR Balus reply to BJP state president Annamalai who raised a question about L Murugan

இது தொடர்பாக பேசிய அண்ணாமலை, " மிகவும் வருத்தமான ஒரு விசயம். நாடாளுமன்றத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அவருடைய துறைச் சார்ந்த ஒரு கேள்விக்கு பதில் தருகிறார். அப்போது திமுகவின் மூத்த தலைவர், எம்பியுமான டி.ஆர்.பாலு, மத்திய இணையமைச்சர் முருகனைப் பார்த்து அன்ஃபிட் என்று கூறுகிறார். அதாவது தகுதியில்லாத அமைச்சர் என்று கூறுகிறார்.

ஒரு மத்திய அமைச்சர், நாடாளுமன்றத்தில் தன்னுடைய துறை சார்ந்த கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் அமைச்சரைப் பார்த்து டி.ஆர்.பாலு இப்படி கூறியிருக்கிறார். உடனடியாக, அங்கிருந்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட அனைவரும் எழுந்து கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பிஃட் ஆன அமைச்சர் என்றால் யார் என்று டி.ஆர்.பாலு சொல்வாரா? கொள்ளை அடிப்பவரா, அப்பா தலைவராக இருப்பார், மகன் அமைச்சராக இருப்பதா? இல்லை ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் பிஃட் ஆன அமைச்சரா? இல்லை, பணக்காரர்களாக இருந்தால் பிஃட் ஆன அமைச்சரா? அமைச்சர் முருகனின் தாய் தந்தையர் நாமக்கல்லில் தோட்டத்து வேலை செய்து வருவதால், அவர் அன்பிஃட் அமைச்சரா? இல்லை அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்ததால் அன்பிஃட்டா?

எனவே, மத்திய இணையமைச்சர் முருகனிடம் டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். நீங்கள் முருகன் குறித்து தவறாக பேசவில்லை. அவருடைய சமுதாயம் குறித்து தவறாக பேசி உள்ளீர்கள். தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த பட்டியலின சகோதர, சகோதரிகளை டி.ஆர்.பாலு தவறாக பேசி உள்ளீர்கள்" என்று கட்டமாக அண்ணாமலை கூறினார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில்அளித்த டிஆர் பாலு, "அண்ணாமலைலாம் பெரியவரா.. அவருக்கு பதில் சொல்ற அளவுக்கு நான் சீப்பா போய்ட்டேனா.. பார்லிமென்டில் மெயின் கேள்வி எழுப்பியது யார் தெரியுமா? ஆ ராசா கேள்வி எழுப்பினார். அவரும் தலித்தானே.. கேள்வி கேட்டவரும் தலித்தான்... அதை மறந்துவிட்டு அவர் (முருகன்) பேசுகிறார்.. சேம்சைடு கோல் போடுகிறார்.. ஒரு தலித்தை எதிர்த்து இன்னொரு தலித் அப்படி பேசலாமா..

நான் தலித் என்பதற்காக முருகனை அப்படி பேசவில்லை. ஒரு அமைச்சராக இருந்து கொண்டிருப்பவரிடம் எந்த கேள்வி கேட்டோமோ அந்த கேள்விக்கு அந்த அமைச்சர் பேசலாம்.. அவருடைய துணை அமைச்சர் பதில் சொல்லலாம்.. இவர் (முருகன்) எதற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார். மீன்வளத்துறை அமைச்சர் இந்த கேள்விக்கு ஏன் பதில் பேசுகிறார்.. அதற்கு உள்நோக்கம் கற்பித்தால் நான் பொறுப்பல்ல.. எனக்கு ஜாதி மதம் எல்லாம் கிடையாது.. எல்லா ஜாதியும் எல்லா மதமும் ஒன்று தான்.. அவர் வந்து அரசியல் ரீதியாக பேச ஆரம்பித்தால் அதற்கு எல்லாம் பதில் பேச முடியாது.. ஒரு கேள்வியில் உள்ளுக்குள் ஒன்றை வைத்துக் கொண்டு அரசியல் ரீதியாக பேசினால் அதற்கு நான் பதில் சொல்ல முடியாது...

60 வருசமாக அரசியலில் இருக்கிறேன். நேற்று வந்த அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு நான் தாழ்ந்து போய்விட்டேனா.. என் பேச்சை முற்றிலும் தவறாக திரித்து பேசுகிறார்கள் . தமிழ்நாடு சம்பந்தமாக கேள்வி எழுப்புகிறார் ஆ ராசா, அவர் தலித். அவர் கேள்வியின் போது துணை கேள்வி நான் எழுப்புகிறேன்... அப்போது குறுக்கிடுகிறார்.. குறுக்கீடு செய்ய என்ன அருகதை இருக்கிறது... அவர் அந்த துறையின் துணை அமைச்சராக இருக்க வேண்டும். உள்துறையின் துணை அமைச்சராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கேள்வியை அவரே கேட்டு பதில் சொல்லி இருந்தால் பிரச்சனை இல்லை.. எதுவே இல்லாமல், சம்பந்தம் இல்லாமல் தலித் தலித் என்றால் என்ன... நாங்கள் என்ன தலித் விரோதிகளா.. நான் சாதி ரீதியாக யாரையும் தாழ்வு படுத்தவே மாட்டேன்." இவ்வாறு டிஆர் பாலு கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+