சென்னை பிராட்வேயில் போக்குவரத்து மாற்றம்.. அடுத்த 40 நாட்களுக்கு எப்படி போகனும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பிராட்வே பிரகாசம் ரோட்டில் அடுத்த 40 நாட்களுக்கு கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்," மழைநீர் வடிகால் பணி நடைபெறுவதால் பிரகாசம் சாலையில் (பிராட்வே சாலை) என்.எஸ்.சி போஸ் சாலை சந்திப்பு முதல் தாதா முத்தியப்பன் தெரு சந்திப்பு வரையிலான பகுதி தற்காலிகமாக ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது.

இதன்படி என்.எஸ்.சி போஸ் சாலையில் (பிராட்வே சந்திப்பு) இருந்து பிரகாசம் சாலை வழியாக ஸ்டான்லி ரவுண்டானா நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் 22.06.2023 முதல் 05.08.2023 வரை தடை செய்யப்படுகிறது. இது தொடர்பான விவரம்:

Traffic change on Broadway Prakasam Road in Chennai for next 40 days

என்.எஸ்.சி போஸ் சாலை மற்றும் எஸ்பிளனேடு சாலைகளில் வரும் வாகனங்கள் குறளகம் சந்திப்பு - என்.எஸ்.சி போஸ் சாலை - பாரீஸ் சந்திப்பு - இடது புறம் - இராஜாஜி சாலை - இப்ராஹீம் சாலை வழியாக செல்லலாம்.

முத்துசாமி சாலையில் வரும் வாகனங்கள் முத்துசாமி சாலை - இராஜா அண்ணாமலை மன்றம் - வடக்கு கோட்டை பக்க சாலை - ரிசர்வ் வங்கி இணைப்பு சாலை - பாரீஸ் சந்திப்பு - இராஜாஜி சாலை - இப்ராஹீம் சாலை வழியாக செல்லலாம்.

ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் பாரீஸ் சந்திப்பு - இராஜாஜி சாலை - இப்ராஹீம் சாலை வழியாக செல்லலாம்.
கொத்தவால்சாவடிக்கு வரும் கனரக வாகனங்கள் இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை வழக்கம் போல் அனுமதிக்கப்படும்.
ஸ்டான்லி ரவுண்டானாவில் இருந்து பிரகாசம் சாலை - அண்ணா பிள்ளை தெரு வழியாக உள்ளே செல்லலாம்.

அண்ணா பிள்ளை தெரு - டேவிட்சன் தெரு - தாதா முத்தியப்பன் தெரு - பிரகாசம் சாலை வழியாக வெளியே செல்லலாம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருபுகழ் தலைமையில் மேலாண்மை குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. பல்துறை வல்லுனர்கள் அடங்கிய, எந்தெந்த இடங்களில் வடிகால் பணிகள் அமைக்கலாம் என்று தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் பரிந்துரை அளித்தனர்.

அதன்படியே சென்னை மாநகராட்சியில் 4,070.10 கோடி ரூபாய் மதிப்பில், 1,033.15 கி.மீ., நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், 2022ல் தொடங்கியது. இதில், 300 கி.மீ., நீளத்திற்கு மேல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளும், இந்தாண்டு இறுதி மற்றும் அடுத்த ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் முக்கிய பகுதிகளில் சாலைகள், தெருக்களில் மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 300 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு வடிகால் இல்லாத பகுதிகள் மற்றும் இணைப்பு இல்லாத பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+