ஒட்டு மொத்தமா கிளம்பிட்டாங்களே! பொங்கலுக்காக சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்! சென்னையே திணறுது!
சென்னை: பொங்கல் பண்டிகை காரணமாக தொடர் விடுமுறையால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களிலுள்ள சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் அருகே கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட இருக்கிறது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சொந்த ஊரில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது என்பது அனைவரும் தவறாமல் செய்து வரும் ஒரு விஷயம்.

இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மண்பானை தயாரித்தல், கரும்பு அறுவடை பணிகள் துவங்கியிருக்கின்றன.
பொங்கல் என்றாலே மண்பானையில் பொங்கல் வைத்து கடவுளுக்கு படையெடுத்து வழிபடுவது வழக்கம். இதை அடுத்து பொங்கல் பானை விற்பனையும் களைகட்டி உள்ளது. புத்தாடை எடுக்க துணிக் கடைகளில் மக்கள் கூடியிருக்கின்றனர். இதற்கிடையே மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறை தவிர்த்து கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சென்னை போன்ற வெளியூர்களில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.'
இதையடுத்து பொங்கல் பானை விற்பனையும் களைகட்டி உள்ளது புத்தாடை எடுக்க துணிக்கடைகளில் மக்கள் கூடியிருக்கின்றனர் இதற்கிடையே மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது பொங்கல் பண்டிகை விடுமுறை தவிர்த்து கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சென்னை போன்ற வெளியூர்களில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்திற்காகவும் 16ஆம் தேதி உழவர் திருநாளை ஒட்டியும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 17 ஆம் தேதி வேலை நாள் வந்தது. அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் வார இறுதி நாட்களின் காரணமாக 18, 19 விடுமுறை நாட்களாக இருந்தது இந்த நிலையில் 17ஆம் தேதியையும் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். 14ஆம் தேதி தொடங்கி 15,16 ஆகிய நாட்கள் மட்டுமல்லாது 17ஆம் தேதியும் விடுமுறை விட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை அடுத்து 17ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 14.01.2025 செவ்வாய்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025, 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான 17.01.2025 (வெள்ளி கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இதனால் வெளியூர்களில் வசிப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்வதற்காக தென் மாவட்டங்களுக்கு சென்னை வாசிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையில், கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், சென்னை நகருக்குள் நெரிசல் ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் படையெடுத்ததால் நகரின் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் இன்னலை சந்திக்க வேண்டியதாயிற்று.
குறிப்பாக வடபழனி, கிண்டி, கத்திப்பாரா உள்ளிட்ட சந்திப்புகளில் இஞ்ச் பை இஞ்சாக வாகனங்கள் ஊர்வதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இதேபோல் தாம்பரம், ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பல இடங்களில் வாகன போக்குவரத்து வழக்கத்தை விட அதிகரித்து ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இரவு 8 மணிக்கு மேலும் போக்குவரத்து வேகமடையாமல் சுணக்கமாகவே இருந்தது.
குறிப்பாக அதிகமான வாகனங்கள் வருவதால் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு பாலப் பணிகள் நடைபெற்று வருவதாலேயே நெரிசல் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர் மக்கள். அதே நேரத்தில் கிளாம்பாக்கத்திலும் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் அரசு பேருந்து நிறுத்துமிடங்களில் பயணிகள் குவிந்தனர். மேலும் ஆம்னி பேருந்து நிறுத்தத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்தது.












Click it and Unblock the Notifications