Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2-வது கட்ட மற்றும் 3-வது முனையம் கட்டுமான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணிகள் காரணமாக சென்னை விமான நிலைய பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றத்தால் பல்லாவரம் மீனம்பாக்கம் இடையேயான ஜி.எஸ்.டி. சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை அதிகரிப்பதற்காக ₹2,467 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் முனையத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1.7 கோடி பயணிகளாக இருக்கும் தற்போதைய திறன், 3.5 கோடி பயணிகளாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Airport gst road Traffic

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட முதல் பகுதி கடந்த 2023-ம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
தற்போது, பழைய சர்வதேச முனையத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ஒருங்கிணைந்த முனையத்தின் இரண்டாம் பகுதியை கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மூன்றாம் முனையத்திற்கான கூரை மற்றும் கட்டுமானத்தை தாங்குவதற்காக மிகப் பெரிய ராட்சத இரும்புத் தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எனவே பயணிகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு கருதி 4-வது முனையம் அருகே தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் ஏப்ரல் 24 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெரிசல் அதிகமாகி உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 2-வது கட்ட மற்றும் 3-வது முனையம் கட்டுமான பணியின் ஒரு பகுதியாக தற்போது மிகப் பெரிய இரும்பு தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக பயணிகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு கருதி 4-வது முனையம் அருகே தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக 4-வது முனையம் அருகே உள்ள வாகனங்கள் உள்ளே வருவதற்கான டோல்கேட் மூடப்படுகிறது.

ஆகவே தாம்பரம், பல்லாவரம் பகுதியில் இருந்து விமான நிலையத்துக்குள் வரும் அனைத்து வாகனங்கள் ஜி.எஸ்.டி.சாலை சர்வீஸ் சாலையை பயன்படுத்தி, 2-வது முனையம் நுழைவு வாசல் டோல்கேட் வழியாக விமான நிலையத்திற்குள் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையின் 4-வது முனையம் புறப்பாடு பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்கள், ஒரே ஒரு டோல்கேட் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு டிராபிக் மார்ஷல்கள் பணியில் இருப்பார்கள். 1 மற்றும் 2-வது முனையங்கள் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கமான வழிகளை பயன்படுத்தலாம்.

பயணிகள் வசதிக்காக 1-வது மற்றும் 2-வது முனையம் இடையே இயக்கப்படும் பேட்டரி வாகனங்கள் வழக்கம் போல் இயங்கும். ஆனால் 1 மற்றும் 4-வது முனையங்கள் இடையே இயக்கப்படும் பேட்டரி வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும். பயணிகள் வசதிக்காக 1 மற்றும் 4-வது முனையங்கள் இடையே வாக்லேட்டர் வசதிகள் வழக்கம்போல் இயங்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த ஏற்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் 24-ந்தேதி வரை, 40 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மாற்றம் செய்யப்பட்ட அன்றே கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. விமான நிலையத்திற்குள் செல்லும் வாகனங்கள் நுழைவு வாயில் டோல்கேட் அருகே வரிசையில் நின்று சென்றதால் தாம்பரம், பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லக்கூடிய சர்வீஸ் சாலையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஜி.எஸ்.டி. சாலை வழிச்சென்ற கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+