சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடை மழை.. பூஜை விடுமுறைக்காக ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு.. சென்னையில் போக்குவரத்து பாதிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் மழை!-வீடியோ

    சென்னை: சென்னையில் திடீர் மழையால் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    சென்னையில் வெப்பசலனத்தில் இன்று காலை திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த கனமழையால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மழை விட்ட பிறகு மழைக்கு ஒதுங்கியிருந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை எடுத்து கொண்டு கிளம்பினர்.

    Traffic Jam affects in Chennai in many of the places

    பெரும்பாலானோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் கோயம்பேடு, திநகர், பூந்தமல்லி ஹைரோடு, ஜிஎஸ்டி சாலை ஆகிய இடங்களில் வாகன நெரிசல் காணப்பட்டது.

    மேலும் நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதனால் முக்கியமான இடங்களில் பொரி, பழம், தோரண கடைகள் முளைத்துள்ளன. இன்று வார கடைசி நாள் என்பதால் பெரும்பாலான அலுவலகங்கள், கடைகள், பஸ் டெப்போக்கள் ஆகியவற்றில் ஆயுத பூஜை போடுகின்றனர்.

    அதற்காக பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இது மட்டுமல்லாமல் 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இவர்களும் இரு சக்கர வாகனங்களிலேயே பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    சபரிமலை செல்ல முயலும் பெண்கள் பின்னணியை விசாரியுங்கள்.. எச்.ராஜா ஆவேசம் சபரிமலை செல்ல முயலும் பெண்கள் பின்னணியை விசாரியுங்கள்.. எச்.ராஜா ஆவேசம்

    இதனால் எங்கு பார்த்தாலும் பேருந்துகள், லாரிகள், வேன்கள், பைக்குகள் என வரிசை கட்டி கொண்டு நிற்கின்றன. மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பு இருக்கும் என்பதால் அலுவலகங்களை விட்டு சிலர் முன்கூட்டியே கிளம்பி வருகின்றனர். சென்னை சிட்டியை சுற்றி எங்கு பார்த்தாலும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை காணப்படுகிறது.

    English summary
    Most of the places in Chennai affected by traffic jam because of sudden rain and continuous pooja holidays.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X