'லீவு' விட்ட மழை.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. சென்ட்ரல், எழும்பூரில் போக்குவரத்து நெரிசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கனமழை பிரித்து மேய்ந்து வரும் நிலையில், சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் முண்டியடித்து வருகின்றனர்.

மழையால் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால், சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

இதேபோல, கோயம்பேடு, பெருங்களத்தூர், போரூர் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 அடித்து நொறுக்கும் மழை..

அடித்து நொறுக்கும் மழை..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம், புதுவையில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த சூழலில், வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று உருவாகியது. வழக்கமான பருவமழையுடன், காற்றழுத்த தாழ்வு நிலையும் சேர்ந்து கொண்டதால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட தமிழக மாவட்டங்களில் நேற்று காலை முதலாக தொடர்ந்து இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

 தொடர் விடுமுறை

தொடர் விடுமுறை

தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஞாயிறையும் சேர்த்து மொத்தம் 3 நாட்கள் விடுமுறை ஆகிவிடுகிறது. இதனால் மாணவர்கள் குஷி அடைந்துள்ளனர்.

 சொந்த ஊர் - படையெடுக்கும் மக்கள்

சொந்த ஊர் - படையெடுக்கும் மக்கள்

ஒருநாள் விடுமுறை என்றாலே நம் மக்கள் சொந்த ஊருக்கு செல்லாமல் விட மாட்டார்கள். இதில் 3 நாள் விடுமுறை என்றால் கேட்கவா வேண்டும். பெட்டி, படுக்கைளை எடுத்துக் கொண்டு சென்னையில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு ஜூட் விட ஆரம்பித்துள்ளனர். கார் வைத்திருப்பவர்கள் தங்கள் கார்களிலேயே ஊருக்கு புறப்பட்டுள்ளனர். மற்றவர்கள், ரயில், பஸ்களில் சொந்த ஊருக்கு முண்டியடித்து செல்வதை பார்க்க முடிகிறது.

 பயங்கர போக்குவரத்து நெரிசல்

பயங்கர போக்குவரத்து நெரிசல்

இந்நிலையில், கனமழையையும் பொருட்படுத்தாமல் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்களுக்கு மக்கள் அதிக அளவில் வருவதால் அங்குள்ள சாலைகளிலும் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல, ரயில் கிடைக்காதவர்கள் பஸ்களை நோக்கி படையெடுப்பதால் கோயம்பேடு, போரூர், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. இதனால், மழைக்காலத்தில் வெறிச்சோடி காணப்படும் சென்னையின் முக்கிய சாலைகளில், இன்றைக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை பார்க்க முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+