ஸ்தம்பித்த திருச்சி - சென்னை ஹைவே.. 5 கி.மீக்கு அணிவகுத்த வாகனங்கள்.. வாகன ஓட்டிகள் கடும் அவதி
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பக்ரீத் பண்டிகை, தொடர் முகூர்த்த நாட்கள் மற்றும் வார விடுமுறை என்பதால் கடந்த 4 ஆம் தேதியில் இருந்து சென்னையில் வசித்து வருபவர்கள், சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் சென்னை கிளாம்பாகத்தில் இருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

அலைமோதிய பயணிகள் கூட்டம்
குறிப்பாக கிளாம்பாக்கத்தில் போதிய பஸ் வசதிகள் இல்லையென பயணிகள் போராட்டம் செய்து இருந்தனர். அதிமுக மற்றும் தவெக கட்சிகளும் இது தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தன. எனினும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் வார விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகம் செல்ல வேண்டும் என்பதற்காக சொந்த ஊர் சென்றவர்கள் இன்று சென்னை திரும்பி வருகிறார்கள். இதனால் தென்மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று இரவு நெல்லை ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் வழக்கத்துக்கு மாறாக பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருச்சி டூ சென்னை நெடுஞ்சாலை
இதேபோன்று ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்து இருந்தது. இருந்தாலும் சென்னை செல்ல வேண்டும் என்பதற்காக கட்டணத்தை பார்க்காமல் புக் செய்து பயணம் செய்து வருகிறார்கள். இது போக சொந்த வாகனத்திலும் பலர் சென்னை திரும்புகிறார்கள். இதனால் திருச்சி டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பயணிகள் அதிகம் பேர் சென்னை திரும்புவதால், குறிப்பாக நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், திருச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வாகனங்களும் சென்னை செல்வதற்கு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தான் பயன்படுத்துகிறார்கள். இதனால் திருச்சியில் இருந்து சென்னை வரை நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன.
வாகன ஓட்டிகள் கடும் அவதி
இந்த நிலையில் இன்று இரவு 9 மணியளவில் விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடையிடையே மழையும் பெய்ததால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்தபடி சென்றன. நேரம் செல்ல செல்ல சுமார் 5 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்தன. ஆமை வேகத்தில் வாகனங்கள் சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். லாரி, கார், பஸ், வேன்கள் அணிவகுத்து நிற்பதால் நீண்ட நேரமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்திலேயே இந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், நாளை அதிகாலை சென்னையில் போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்குமோ என நினைத்து வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications