சரிந்து விழுந்த இரும்பு கேட்.. காவலாளி பலி! உயிர் பலி வாங்கும் ‘ஸ்லைடிங்’ கேட்டுக்கு எப்போது முடிவு?
சென்னை: சென்பனை அடுத்த மணலி புதுநகர் பகுதியில் தொழிற்சாலையில் இரும்பு கேட் விழுந்ததில் காவலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்லைடிங் கேட் எனப்படும் நகரும் இரும்புக் கதவுகளால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதாகவும், இந்தக் கதவுகள் தயாரிப்பில் பாதுகாப்பு நடைமுறைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேட் சரிந்து பலி
சென்னையை அடுத்த மணலி புது நகரில் ஹரி கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் எஸ் எம் டெக்னாலஜி என்ற தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் காவலாளி இரும்பு கேட்டை மூடியபோது எதிர்பாராதவிதமாக ரோலிங் கேட் சரிந்து விழுந்து காவலாளி குமாரசாமி (68) உயிரிழந்துள்ளார்.
கேட் சரிந்து விழுந்ததில் கால் மற்றும் இடுப்பு பகுதிகள் நசிங்கிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமாரசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேட் சரிந்து விழுந்த சிசிடிவி காட்சி வெளியான நிலையில், மணலி புதுநகர் காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடரும் அசம்பாவிதங்கள்
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மணலி புதுநகர் போலீசார் கொலை நோக்கம் இல்லாத மரணம் என அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை நங்கநல்லூர் பகுதியில் இரும்பு ஸ்லைடிங் கேட் சரிந்து பள்ளிச் சிறுமியின் தலையில் விழுந்ததில் அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற ஸ்லைடிங் கேட் விழுந்து உயிர் பலி வாங்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த மணலியில் ஹரி கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் எஸ் எம் டெக்னாலஜி என்ற தனியார் தொழிற்சாலையின் ரோலிங் கேட் சரிந்து விழுந்து காவலாளி குமாரசாமி (68) என்பவர் உயிரிழப்பு. இதில் கால் மற்றும் இடுப்பு பகுதிகள் நசிங்கிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்… pic.twitter.com/BdWrOyPx7t
— Oneindia Tamil (@thatsTamil) June 24, 2025
ஸ்லைடிங் கேட்
திறந்து மூடுவதற்கு வசதி அதிகம் இல்லாத இடங்களில், ரோட்டுக்கு அருகிலேயே வாசல் இருக்கும் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இது போன்ற ஸ்லைடிங் கேட் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஸ்லைடிங் கேட்டுகளை எளிதாக திறக்க முடியும் என்பதால் பலரும் வீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், ஸ்லைடிங் கேடுகள், அதிக எடை உள்ளதாகவும், அதற்கு ஏற்ற தாங்கும் திறன் அற்ற வகையில் பில்லர்கள் இருப்பதாலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நேர்வதாக கூறப்படுகிறது. இதுபோன்ற கதவுகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே












Click it and Unblock the Notifications