Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரிசர்வ் பெட்டியில் ஓசி பயணம்.. பாத்ரூம் கூட போக முடியவில்லை.. கஷ்டங்களை வீடியோவாக வெளியிட்ட பெண்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே ரயில் பயணங்களின் போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வட மாநில மக்கள் ஆக்கிரமித்து கொள்வது தொடர்கதையாகி வரும் நிலையில், எர்ணாகுளத்தில் இருந்து காட்பாடிக்கு முன்பதிவு பெட்டியில் பயணித்த 3 பெண்கள், ரிசர்வ் பெட்டிக்குள் ஓபன் டிக்கெட் எடுத்துவிட்ட வந்த மக்களின் அத்துமீறலால் ஏற்பட்ட கஷ்டங்களை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர்.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே நம்பி இருக்கின்றனர். குறைந்த விலை மட்டுமல்லாமல் பாதுகாப்பான பயணமும் ரயில்களில் உறுதி செய்யப்படுகிறது. முன்பதிவு செய்து ரயிலில் பயணிக்கும் போது கூடுதல் நிம்மதியுடன் பயணிக்க முடியும். நீண்ட தூர பயணங்களுக்கு சாமானிய மக்கள் ரயில்களை மட்டுமே நம்பி இருக்கின்றனர்.

Railways North Indians Train Problems

ஒரு நாளில் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அதேபோல் முக்கிய நகரங்களில் பலரும் ரயில் மூலமாகவே பணிக்கு செல்கின்றனர். இண்டர்சிட்டி, எக்ஸ்பிரஸ், தொலைதூர ரயில்கள், வந்தே பாரத் என்று விதவிதமான ரயில்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அண்மைக் காலங்களில் வட மாநில மக்களின் அத்துமீறலால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கும்பமேளாவின் போது வட மாநில மக்கள் ஏசி பெட்டிகளில் செய்த சேட்டைகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்பதிவு கூட செய்யாமல், கண்ணாடிகளை உடைத்து ஏடி பெட்டிகளுக்குள் வரத் தொடங்கினர். அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு பயணிக்கும் மக்கள் ரயில்களில் அனுபவிக்கும் துன்பங்களை எவ்வளவு கூறினாலும் போதாது.

இந்த நிலையில் திருப்பூரிலும் வடமாநில மக்கள் ரயில்களில் அத்துமீறத் தொடங்கி இருக்கின்றனர். பாட்னா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் எர்ணாகுளத்தில் இருந்து காட்பாடிக்கு முன்பதிவு செய்த பெட்டியில் 13 பேர் பயணித்திருக்கின்றனர். இந்த ரயில் ஏறியது முதல் பட்ட அவதிகளை அந்தப் பெண் வீடியோவாகவே வெளியிட்டுள்ளார்.

Railways North Indians Train Problems

அந்த வீடியோவில் 2 பெண்களும் பேசுகையில், எர்ணாகுளத்தில் ஏறியதில் இருந்து ஸ்லீப்பரில் படுக்க கூட முடியவில்லை. திருப்பூரில் ரயில் நின்ற போது 5 டிடிஆர் இருந்தனர். அவர்களிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஓபன் டிக்கெட் எடுத்துவிட்டு அவ்வளவு பேரும் இந்த பெட்டியில் ஏறிவிட்டார்கள். எங்களால் சீட்டில் உட்கார கூட முடியவில்லை. தூங்க முடியவில்லை.

டிடிஆரிடம் சென்று புகார் கொடுத்தால், எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் கொடுங்க.. என்ன வேணாலும் பண்ணிக்கோங்க என்கிறார்.. ஆர்பிஎஃப் நபர்களிடம் கூறினால், எந்த ரியாக்‌ஷனும் இல்லை.. 193க்கு போனில் அழைத்தால், அது ஹோல்டிலேயே வைத்திருக்கிறார்கள்.. இரவு முதல் இப்போது வரை இப்படியே உட்கார்ந்து வந்துள்ளோம். ரிசர்வ் செய்து பணம் கொடுத்து வந்தால், உட்கார்ந்தே வர வேண்டுமா?

வழிவிடு என்று சொன்னால் கூட வழி கொடுக்க மறுக்கிறார்கள்.. பெண்களால் கழிப்பறைக்கு கூட செல்ல முடியவில்லை.. பாத்ரூம் கூட போக முடியாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.. தூங்குவோரை கூட தூங்கவிடாமல் அவர்களின் கால்களில் அமர்ந்திருக்கிறார்கள்.. பான் பராக்கெல்லாம் போட்டு துப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.. கொஞ்சம் கூட நாகரீகமே இல்லை..

ஒரு சிலர் ஓபன் டிக்கெட் எடுத்தார்கள்.. ஒரு சிலர் டிக்கெட்டே எடுக்கவில்லை.. டிக்கெட் எடுக்காதவர்களுக்கு அபராதம் மட்டுமே போடுகிறார்களே ஒழிய, அவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்த மறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் ரிசர்வ் பெட்டியில் அவ்வளவு பேர் அமர்ந்திருப்பது முழுமையாக காட்டப்பட்டுள்ளது.

டிடிஆர் உடன் நடக்கும் உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒரு டிடிஆர், நான் முழுமையாக செக் செய்துவிட்டேன்.. அனைவரிடமும் டிக்கெட் இருக்கிறத் என்கிறார்.. மற்றொரு நபரோ, தனி ஒருவனாக நான் என்ன செய்ய முடியும் என்கிறார்.. மற்றொருவர் மக்கள் இங்கு ஏறிவிட்டார்கள்.. அதற்கு என்ன செய்வது என்று சாதாரணமாக கேட்டு செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+