பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம்
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் வெள்ளிக்கிழமை (ஜூன் 6 ஆம் தேதி) முதல் 23 ஆம் தேதி வரை குறிப்பிட்ட நாள்களில் 7 விரைவு ரயில்கள் தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரயில் தண்டவாளம் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனால், வரும் சனிக்கிழமை (ஜூன் 6) பிற்பகல் 1.15 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் (எண் 12635) வழியில் 1 மணி நேரம் தாமதமாக செல்லும். வரும் சனிக்கிழமை திருச்சியில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் பகத்கி கோதி அதிவிரைவு ரயில் (எண் 20482) வழியில் 1.30 மணி தாமதமாகச் செல்லும்.
வரும் ஜூன் 6, 9, 13, 16, 18, 21 ஆகிய தேதிகளில் ஹவுராவில் இருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் நிலையம் வரும் ரயில் (எண் 12839) வழியில் 50 நிமிஷம் தாமதமாக செல்லும். வரும் 23 ஆம் தேதி ஹவுராவில் இருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் நிலையம் வரும் ரயில் (எண் 12839) 55 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.
வரும் 9, 16, 23 ஆகிய தேதிகளில் சாலிமரில் இருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 22642) வழியில் 55 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும். வரும் ஜூன் 23 ஆம் தேதி காட்பாடியில் இருந்து மாலை 7.25 மணிக்குப் புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் மெமு ரயில் வழியில் 35 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.
வரும் ஜூன் 4, 11, 18 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பாட்னாவிலிருந்து புறப்படும் எர்ணாகுளம் விரைவு ரயில் (எண் 22644) வழியில் 55 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications