5 மணி நேரம் ரயில் லேட்டா வந்தா யார் பொறுப்பு? பிளாட்பாரம் டிக்கெட் இருந்தும் பயணிக்கு ரூ.500 அபராதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகத்தின் வித்தியாசமான ரூல்ஸ் காரணமாக, பயணி ஒருவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் கொந்தளிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே துறையின் இந்த கடுமையான நடவடிக்கையை எதிர்த்து பாதிக்கப்பட்ட பயணி வெளியிட்ட வீடியோ இணையத்தில் படுவேகமாக பரவி கொண்டிருக்கிறது. என்ன நடந்தது?

மும்பையைச் சேர்ந்தவர் ஆதித்யா.. இவர் தன்னுடைய உறவினரை ரயிலில் ஏற்றி விடுவதற்காக நேற்று முன்தினம் கல்யாண் ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதற்காக முறைப்படி பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

Train Delay Platform Ticket Indian Railways Railway Rules Passenger Rights Railway News Travel News Viral News

பிளாட்பாரம் டிக்கெட்

ஆனால் அவர் உறவினர் செல்ல வேண்டிய ரயில் திட்டமிட்ட நேரத்திற்கு வராமல், 5 மணி நேரம் கடுமையான தாமதத்துடன் வந்து சேர்ந்துள்ளது. ரயில்வே துறையின் இந்த குளறுபடியால், வேறு வழியின்றி ஆதித்யா தனது உறவினருக்காக 5 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிலைய பிளாட்பாரத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இறுதியில் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, தனது உறவினரை பத்திரமாக ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

இதனை தொடர்ந்து ஆதித்யா ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியேறுவதற்காக வாசலுக்கு வந்தபோது, அங்கு பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் அவரது டிக்கெட்டை சோதனையிட்டார். ஆதித்யா தன்னிடம் இருந்த பிளாட்பார டிக்கெட்டை அவரிடம் காண்பித்துள்ளார்.

5 மணி நேரம் ரயில் லேட்

அதை ஆய்வு செய்த டிக்கெட் பரிசோதகர், அந்த பிளாட்பார டிக்கெட் காலாவதியாகிவிட்டதாகக் கூறி, ஆதித்யாவுக்கு ரூ.500 அபராதம் விதிப்பதாக கூறினார்.. இதைக்கேட்டு ஆதித்யா அதிர்ச்சி அடைந்தார்.

ரயில் 5 மணி நேரம் தாமதமாக வந்ததால் தான் தம்மால் குறித்த நேரத்திற்குள் வெளியேற முடியவில்லை என்று ஆதித்யா எவ்வளவோ விளக்கியும், கெஞ்சியும் பார்த்துள்ளார். ஆனால், அந்த டிக்கெட் பரிசோதகர் அதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், விதிகளின்படி அபராதம் செலுத்தியே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அபராதத்தை வசூலித்துள்ளார்.

ரயில்வே துறையின் தற்போதைய விதிமுறைகளின்படி, ஒரு பிளாட்பாரம் டிக்கெட் வாங்கப்பட்ட நேரத்தில் இருந்து வெறும் 2 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் பயணி பிளாட்பாரத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்பது விதியாகும். இந்த விதியை சுட்டிக்காட்டியே ஆதித்யாவுக்கு இந்த பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம் தந்த அபராதம்

இதனால் கடும் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்த ஆதித்யா, ரயில் நிலையத்திற்கு வெளியே வந்ததும் இந்த அநீதி குறித்து ஒரு வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

அதில், ரயில்வேயின் இந்த ரூல்ஸ் குறித்து கடுமையாக சாடிய அவர், ரயில் 5 மணி நேரம் தாமதமாக வந்ததற்கு பயணி எப்படி பொறுப்பேற்க முடியும் என்றும், ரயில்வே துறையின் இந்த மெத்தனப்போக்கிற்கும் தாமதத்திற்கும் யார் பொறுப்பேற்பார்கள் என்றும் மிக ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களும் சக பயணிகளும் ஆதித்யாவுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

ரயில்களை சரியான நேரத்திற்கு இயக்கத் தவறும் ரயில்வே நிர்வாகம், அதனால் பாதிக்கப்படும் சாதாரண பொதுமக்களிடம் இப்படி அபராதம் என்ற பெயரில் பணம் பறிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. அத்துடன் ரயில்கள் தாமதமாகும் காலங்களில் இந்த பிளாட்பார டிக்கெட் விதிமுறையை தளர்த்துவது குறித்து ரயில்வே நிர்வாகம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பயணிகள் தரப்பில் பலத்த கோரிக்கை வலுவாகவே எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+