சென்னைக்கு எப்படி போறது? குழப்பத்திலிருந்த மக்களுக்கு குட்நியூஸ்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: திருச்சி - திண்டுக்கல் ரயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்வே சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில், ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டதால் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே அறிவித்துள்ளது.
தென்னகத்தின் நுழைவாயில் என அழைக்கப்படும் திண்டுக்கல் ரயில் நிலையம் முக்கியமான ரயில் நிலையமாக இருக்கிறது. சென்னை - திருச்சியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் திண்டுக்கல் ரயில் நிலையம் வழியாகத்தான் செல்கிறது.

தற்போது திண்டுக்கல் திருச்சி இடையிலான ரயில் பாதை இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட்டு இருக்கும் நிலையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். மேலும் பாண்டியன், வைகை , முத்துநகர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களும், வந்தே பாரத், தேஜஸ் உள்ளிட்ட ரயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
தெற்கு ரயில்வே:
இந்நிலையில் கடந்த பத்தாம் தேதியன்று திண்டுக்கல் திருச்சி ரயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதாகவும், இதனால் ரயில்வே சேவை மாற்றி அமைக்கப்படுவதாக ரயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில் அந்த வழித்தடத்தில் மேற்கொள்ள இருந்த பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேஜஸ் நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் ரத்து:
இதுதொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்.22671), மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22672) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
வழக்கமான ரயில் சேவை:
குருவாயூரில் இருந்து வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும். செங்கோட்டையில் இருந்து வரும் 27, 28, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16848), நாகர்கோவிலில் இருந்து வரும் 31-ந்தேதி காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16340), உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து வரும் 29-ந்தேதி மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் காசி தமிழ் சங்கம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16368) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
வழக்கமான அட்டவணை:
இதேபோல, கன்னியாகுமரியில் இருந்து வரும் 28-ந் தேதி காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயிலும் (12666), நாகர்கோவிலில் இருந்து வரும் 28-ந்தேதி காலை 9.15 மணிக்கு புறப்பட்டு தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16354) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்:
நாகர்கோவிலில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16321), மறுமார்க்கமாக கோவையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16322) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
செங்கோட்டை:
ஈரோட்டில் இருந்து வரும் 27, 30 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்ட செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16845). மறுமாா்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16846) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
-
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது












Click it and Unblock the Notifications