தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு.. ஒரு மணிநேரத்தில் எல்லாமே போச்சே! மக்களுக்கு காத்திருந்த ஷாக்
சென்னை: தீபாவளிக்கான ரயில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இந்த டிக்கெட்டுகளும் மிக விரைவாக விற்று தீர்ந்துள்ளன.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் 'இந்தியன் ரயில்வே' முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இது 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. ஒவ்வொரு நாளும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே டிக்கெட் கிடைப்பதில் கடும் சிரமங்கள் இருக்கின்றன.

இதற்கு ரயில்வே நிர்வாகம்தான் முக்கிய பொறுப்பு என்றாலும், இந்த சிக்கலை தீர்க்க ரயில்வே நிர்வாகத்தால் மட்டுமே முழுமையாக முடியாது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், சென்னைதான் பிரதான நகரம். கிராமங்களிலிருந்து வேலை தேடி புலம் பெயர்பவர்களில் பெரும்பாலானோர் சென்னையை நோக்கித்தான் வருகின்றனர். இது சென்னையின் மக்கள் தொகை அடர்த்தியை அதிகரிக்கிறது. அதேபோல இவர்கள் விழா நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் எனில் அதற்கான ஏற்பாடுகள் போதுமானதாக இருக்க வேண்டும்.
இங்குதான் ரயில் சேவையின் தேவை வருகிறது. சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு புலம் பெயரும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஏற்பவாறு ரயில்கள் இல்லை என்பதுதான் எதார்த்தம். எனவே கிடைக்கும் ரயில்களில் டிக்கெட்கள் பதிவு செய்யப்படுகின்றன. இப்படியாக முன்பதிவுகள் வேகமாக நிரப்பப்படுகின்றன. தீபாவளி, பொங்கல் என பல முக்கிய பண்டிகை நாட்களில் மிக வேகமாக டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன.
இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் மாதம் 31ம் தேதி வருகிறது. ரயில் டிக்கெட்டுகளை பொருத்தவரை 120 நாட்களுக்கு முன்பாக புக் செய்யமுடியும். அந்த வகையில் அக்.28ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன.
குறிப்பாக சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் என தென் மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், நெல்லை, பொதிகை, முத்துநகர், அனந்தபுரி, மலைக்கோட்டை உள்ளிட்ட ரயில்களிலும் கோவைக்கு செல்லும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு விரைவாக முடிந்தது. இதுதவிர, சென்னையில் இருந்து புறப்படும் பகல் நேர ரயில்களான வைகை, பல்லவன், குருவாயூர் ஆகிய ரயில்களிலும் டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்திருக்கின்றன.
இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்.30ம் தேதிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்திற்கெல்லாம் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications