முடிவுக்கு வந்த கோடை விடுமுறை.. ஊர் திரும்ப முந்தும் பயணிகள்.. போக்குவரத்து கழகம் சூப்பர் திட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், 5ம் தேதியிலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை தொடங்கியது. இதனையடுத்து மக்கள் குடும்பங்களுடன் வெளியூர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்றுள்ளனர். இந்நிலையில் தற்போது பள்ளி ஜூன் 6ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து, மக்கள் மீண்டும் சென்னை மற்றும் பெருநகரங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த முறை பேருந்து பயன்பாடு அதிகரிக்கும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்திருக்கிறது. எனவே, இந்த நெருக்கடியை சமாளிக்க கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை மற்றும் நெல்லை என 6 மண்டலங்களிலிருந்தும், இது தவிர, விரைவு போக்குவரத்து மற்றும் மாநகர போக்குவரத்து என 8 மண்டலங்களில் 20,258 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஜூன் 6ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை முடிவடைகிறது. எனவே மக்கள் தங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்ப பேருந்துகளை முன்பதிவு செய்திருக்கின்றனர். இயல்பாகவே இந்த காலத்தில் பேருந்துகள் பயன்பாடு அதிகரிக்கும்.
எனவே இதனை சமாளிக்க போக்குவரத்து கழகம் வசம் இருக்கும் அனைத்து பேருந்துகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதன் மூலம் மக்கள் நெரிசல் குறைக்கப்படும். அதேபோல சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படும். ஏற்கனவே பணி நிலையங்களில் இருந்த பேருந்துகள் பழுது நீக்கப்பட்டு தயாராக இருக்கிறது. இந்த நெருக்கடியை நாங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் எதிர்கொள்வோம்.
பெரும்பாலான பயணிகள் இரவு நேரத்தில் பயணம் செய்வதால் அந்த நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இருப்பதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். நெரிசலை சமாளிக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டுமல்லாது வழக்கமாக இயக்கப்படும் 20,258 பேருந்துகளை விட கூடுதலாக 500 பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் 5ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளனர். போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
மாட்டுத்தாவணியில் பயணிகள் திடீர் மறியல்! விடிய விடிய காத்திருந்தும் பேருந்துகள் வராததால் போராட்டம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications