டிஆர்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. 1,766 ஆசிரியர்கள், 4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்.. விவரம்
சென்னை: 2024-ம் ஆண்டுக்கான உத்தேச ஆண்டு அட்டவணையை www.trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஜனவரி 10ம் தேதி வெளியிட்டு உள்ளது. அதில் உள்ள அறிவிப்புகளின் விவரங்களை பார்ப்போம்
அரசு பணிகளும், ஆசிரியர் பணிகளிலுமே நிரந்தர வேலை, நல்ல சம்பளம் கிடைக்கிறது.. இதனால் எப்படியாவது அரசு ஊழியர்களாகவோ, ஆசிரியர் ஆகவோ, வங்கி ஊழியர்கள் ஆகவோ மாற வேண்டும் என்று பட்டதாரி இளைஞர்கள் . அதேநேரம் ஆசிரியர் பணியில் சேர வேண்டும் என்று லட்சக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் ஆசிரியர்பணிகல் சேர கடும் போட்டி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பபட உள்ள ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் குறித்து டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2023ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேர்வு அட்டவணையில் இடம்பெற்ற 9 அறிவிப்புகளில் ஒன்றுக்கு மட்டுமே டிஆர்பி தேர்வு நடத்தி இருந்தது. டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் தான் தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், வட்டார கல்வி அதிகாரிகள் (பிஇஓ), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்களை தேர்வு செய்கிறது. இதுதவிர ஆசிரியர் தகுதித்தேர்வையும் (டெட்) டிஆர்பி தான் ஆண்டு தோறும் நடத்துகிறது.
ஒவ்வொரு ஆண்டும் என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும், துறைவாரியாக எவ்வளவு பணியிடங்கள், தேர்வு தேதி, அறிவிப்பு வரப்போகும் மாதம் போன்ற தகவல்கள் அந்த அட்டவணையில் இடம் பெற்றிருக்கும். அதனை பார்த்து தான் போட்டித்தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார் ஆவார்கள்.
அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் டிசம்பர் மாதத்திலேயே வெளியிடப்படும். ஆனால் 2024-ம் ஆண்டு பிறந்தும் இன்னும் டிஆர்பி வருடாந்திர தேர்வு உத்தேசஅட்டவணை இப்போது தான் வெளியாகி உள்ளது.
அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான உத்தேச ஆண்டு அட்டவணையை www.trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஜனவரி 10ம் தேதி வெளியிட்டு உள்ளது. அதில் உள்ள அறிவிப்புகளின் விவரங்களை பார்ப்போம்..
1,766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜனவரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடத்தப்படும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்லூரி கல்வியியல் ஆகியவற்றில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என டிஆர்பி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியாக உள்ளது. தேர்வு ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளதாக டிஆர்பி அறிவித்துள்ளது.
200 முதுநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆகஸ்டு மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என டிஆர்பி அறிவித்துள்ளது.
முதலமைச்சர் கூட்டுறவு ஆராய்ச்சியாளர் பணியிடங்களில் உள்ள 120 இடங்களுக்கு ஜூன் மாதம் அறிவிப்பாணை வெளியாகிறது. செப்டம்பரில் அதற்கான தேர்வு நடத்தப்பட உள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் 26 மூத்த விரிவுரையாளர்கள், 103 விரிவுரையாளர்கள், 10 இளநிலை விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிசம்பரில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக டிஆர்பி அறிவித்துள்ளது.
அரசு சட்டக்கல்லூரியில் உள்ள 56 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு நவம்பரில் அறிவிப்பாணை வெளியிடப்படுகிறது. தேர்வை பொறுத்தவரையில், அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளதாக டிஆர்பி அறிவித்துள்ளது. மேற்கண்ட தகவல் டிஆர்பி அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications