வங்கி கணக்குகளில் கோடிக்கணக்கில் விழும் பணம்.. ஓ இதுதான் உண்மையான காரணமா? டிரெண்டான செம மீம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கி கணக்குகளில் தமிழ்நாட்டில் பலருக்கு அடுத்தடுத்து பல கோடி ரூபாய்கள் பணம் போடப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட அடுத்தடுத்து பணம் போடப்படுவதற்கு பின்னணி காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் கால்டாக்சி ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. பழனி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் என்பவர், எஸ்எம்எஸ் மூலம் தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவரது கணக்கில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி மூலம் ரூ.9,000 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக மெசேஜில் வந்துள்ளது.

அதுவரை ராஜ்குமார் கணக்கில் ரூ.105 மட்டுமே இருந்தது. ராஜ்குமார் ஆரம்பத்தில் இது ஒரு மோசடி அல்லது பிராங்க் போல இருக்கும் என்று நினைத்தார். ஆனால் பின்னர்தான் அது வங்கி பிழை என தெரிய வந்தது. வங்கி அந்த தொகையை திரும்பப் பெறுவதற்குள் ரூ.21,000ஐ அவர் தனது நண்பருக்கும் மாற்றினார்.

 Trending meme on why crores of money being deposited in the bank accounts of people?

மறுநாள் காலை, தூத்துக்குடியைச் சேர்ந்த TMB அதிகாரிகள் அவரைத் தொடர்பு கொண்டு, பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். மேலும் பணம் எடுக்க வேண்டாம் என ராஜ்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்ட பின் பணம் அவரின் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சில நாட்களில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியின் (டிஎம்பி) நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான எஸ் கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர் சம்பவம்: ஆனால் அந்த சம்பவம் அதோடு முடியவில்லை. அதன்பின் அடுத்தடுத்த வங்கிகளில் இதே சம்பவம் தொடர்ந்து நடந்தது. இதேபோல் கடந்த சனிக்கிழமை காலை, சென்னையைச் சேர்ந்த முகமது இட்ரிஸ் என்ற மெடிக்கல் தொழிலாளி தனது கோடக் மஹிந்திரா வங்கிக் கணக்கில் ₹753 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

தேனாம்பேட்டையில் உள்ள கோடக் மஹிந்திரா வங்கிக் கிளையில், அந்த மெடிக்கல் தொழிலாளியின் கணக்கு உள்ளது. அவர்கள் கொடுத்த விளக்கத்தில், தொழில்நுட்பக் கோளாறால் தவறான டெபாசிட் செய்யப்பட்டதாகக் கூறி, அதை முடக்கிவிட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளனர். சனிக்கிழமை காலை இட்ரிஸ் தனது வங்கிக் கணக்கில் ₹ 3,000 வைத்திருந்தார், மேலும் அவரது நண்பர் ஒருவருக்கு ₹ 2,000 பரிமாற்றம் செய்துள்ளார், அதன் பிறகு அவருக்கு இந்த மிகப்பெரிய டெபாசிட் குறித்த மெசேஜ் வந்தது.

 Trending meme on why crores of money being deposited in the bank accounts of people?

அதற்கு முதல்நாள் வெள்ளிக்கிழமைதான் தஞ்சாவூரைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் தனது கோடக் மஹிந்திரா வங்கிக் கணக்கில் ₹756 கோடி பெற்றுள்ளார். பின்னர் வங்கி சமரசம் செய்ததை அடுத்து அந்த பணம் திரும்ப பெறப்பட்டது. அவரின் கணக்கிலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பணம் போடப்பட்டதாக கூறப்பட்டது.

மீம்: இப்படி வங்கி கணக்குகளில் தமிழ்நாட்டில் பலருக்கு அடுத்தடுத்து பல கோடி ரூபாய்கள் பணம் போடப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட அடுத்தடுத்து பணம் போடப்படுவதற்கு பின்னணி காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் செய்துள்ள மீமில், Cashier : "இரண்டு நாள் லீவ் கேட்டா கொடுக்கவா மாட்டிங்க... எவன் accountலயாச்சும் பத்தாயிரம் கோடி transfer பண்ணிட்டு இவனை வேலையைவிட்டு தூக்கிட வேண்டியதான், என்று கிண்டலாக மீம் போட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+