“நரிக்குறவர், குருவிக்காரர்” பழங்குடியினர் சான்றிதழ்.. "வார்த்தை" திருத்தப்படும்.. தமிழக அரசு தகவல்!

நீண்டகால கோரிக்கையை அடுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை : நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நரிக்குறவன், குருவிக்காரன் எனக் குறிப்பிட்டு மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்ட நிலையில், குருவிக்காரர் - நரிக்குறவர் என மாற்றப்பட வேண்டும் என்பதற்காக அரசாணையை வெளியிடாமல் இருந்தது தமிழ்நாடு அரசு.

இந்நிலையில், மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதால் அச்சமூகத்தினர் பாதிக்கப்படாது என்பதற்காக இப்போதே அரசாணையை வெளியிட்டு, பின்னர் திருத்தப்படும் எனக் கூறியுள்ளது தமிழ்நாடு அரசு.

நரிக்குறவர், குருவிக்காரர்

நரிக்குறவர், குருவிக்காரர்

இதுதொடர்பாக தமிழக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவர், குருவிக்காரர் இனங்களை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை அடுத்து, நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் 37-வது இனமாக சேர்த்து மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.

பழங்குடியினர்

பழங்குடியினர்

அதற்கேற்ப நரிக்குறவன், குருவிக்காரன் பிரிவினர் அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெறுவதற்கான தகுதியடைய ஏதுவாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை சார்பில் நேற்று முன்தினம் தமிழக அரசும் அரசாணையை வெளியிட்டது. அதேநேரம், 'நரிக்குறவன், குருவிக்காரன்' என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதை 'நரிக்குறவர், குருவிக்காரர்' என்று திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரியுள்ளார்.

ஒருமையில்

ஒருமையில்

இதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது. எனவே, வரும் கல்வி ஆண்டிலேயே இப்பிரிவுகளை சேர்ந்த அனைவரும் பழங்குடியினர் சான்றிதழ்களை பெற்று பயனடைய வேண்டும் என்பதற்காக கால தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு, மத்திய அரசு வெளியிட்டவாறே தமிழ்நாடு அரசும் இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

திருத்தி வெளியிடப்படும்

திருத்தி வெளியிடப்படும்

வரும் நாட்களில் தமிழ்நாடு அரசு கோரியவாறு பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடும்போது, தமிழ்நாடு அரசும் அதை திருத்தி வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருவிக்காரர் - நரிக்குறவர் என மாற்றப்பட வேண்டும் என்பதற்காக அரசாணையை வெளியிடாமல் வைத்திருந்த நிலையில், மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதால் அச்சமூகத்தினர் பாதிக்கப்படாது என்பதற்காக இப்போதே அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+