மண்டைக்கேறிய காம வெறி.. ஆடையின்றி நடுக்காட்டில் கிடந்த பழங்குடி பெண்.. இது இந்தியா தானா
சென்னை: வட மாநிலங்களில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளில் இன்னமும் மூழ்கிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. காவல்துறை, நீதிமன்றம் இருந்தாலும்கூட, ஊர்ப் பஞ்சாயத்துகளையே வடமாநில கிராம மக்கள் நாடும் போக்கு தொடர்கிறது.
இதனால், சம்பந்தப்பட்ட பெண்களை ஊருக்கு நடுவில் நிற்க வைத்து மானத்தை வாங்குவதும், அவர்கள் இழிவாக நடத்தப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது. இதில் பெரும்பாலும் சிக்கி கொள்வது பழங்குடி மற்றும் தலித் பெண்களாக இருப்பது அதைவிட வருத்தத்துக்குரியது.

பழங்குடி பெண்கள்
அதேபோல பாட்டி, மகள், தங்கை, சிறுமி என பாகுபாடு இல்லாமல் சீரழிக்கப்படுகின்றன.. இதிலும் பழங்குடி பெண்களின் நிலைமை படுமோசம். வடமாநிலங்களில் மட்டுமே நடந்து வந்த கொடுமைகள், இப்போது நம்முடைய தென் மாநிலங்களிலும் நடந்து வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது. இதோ ஆந்திராவில் நடந்த இந்த கொடுமையை பாருங்க
ஆந்திரா மாநிலம் மெதக் மாவட்டம் கொள்சாரம் மண்டலத்தில் அப்பாஜி பள்ளி என்ற சிறு கிராமம் உள்ளது. இங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் ஒரு பெண் உடம்பெல்லாம் காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார்.. அந்த பெண் நிர்வாண கோலத்திலும் கிடந்திருக்கிறார்.. நேற்று முன்தினம் கிராம மக்கள் சிலர் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்.
நிர்வாண கோலம்
போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிர்வாண நிலையில் உடலில் காயங்களுடன்
கிடந்த பெண்ணை கண்டு அதிர்ந்தனர்.. காரணம் அந்த பெண் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.. வலி காரணமாக முனகி கொண்டிருந்தார். உடனே அப்பெண்ணை மீட்டு போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும், குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனைக்கு பதறியடித்து கொண்டு ஓடிவந்தனர்.
உடம்பெல்லாம் காயங்கள்
முதலுதவி சிகிச்சை தந்ததையடுத்து, அப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை தருவதற்காக அந்த பெண்ணை, ஐதராபாத் காந்தி மருத்துவமனைக்கு கணவரும், குடும்பத்தினரும் கொண்டு சென்றனர். டாக்டர் எவ்வளவோ போராடியும் அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில் போலீசார் தங்களது விசாரணையை ஆரம்பித்தனர்.
அப்போதுதான் காட்டில் உயிருக்கு போராடி கொண்டிருந்த பெண் பழங்குடியின பெண் என்பது தெரியவந்தது. கடந்த வெள்ளிக்கிழமை கூலி வேலைக்காக அந்த கிராமத்துக்கு வந்திருக்கிறார்.. அப்போது அங்கு வந்த சிலர், நைசாக பேச்சு தந்து காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றிருக்கிறார்.. பிறகு அப்பெண்ணின் சேலையை உருவி, அங்கிருந்த மரத்தில் அதே சேலையால் கட்டி வைத்திருக்கிறார்கள்.
இரவெல்லாம் உயிருக்கு போராட்டம்
பிறகு அப்பெண்ணை முழுமையாக நிர்வாணப்படுத்தி பாலியல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதில் அந்த பெண் கடுமையாக பாதிக்கப்பட்டார்.. பிறகு அந்த கும்பல் அப்பெண்ணை அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளார்கள். இதனால் அந்த பெண் விடிய விடிய இரவெல்லாம் நிர்வாணமாகவும், காயங்களின் வலியுடனும், சாப்பாடு, தண்ணி இல்லாமலும் உயிருக்காக போராடி உள்ளார்.
மறுநாள் காலையில் அருகிலிருந்த கிராமத்தினர் காட்டுப்பகுதிக்கு சென்றபோதுதான், அவரை பார்த்துவிட்டு உடனடியாக தகவல் அளித்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது,.. ஆனால், பழங்குடியின பெண்ணை, கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த குரூரர்கள் யார் என்று தெரியவில்லை.
ஆனால், விசாரணை துரிதமாக நடந்து வருவதால் குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications