வருது வருது.. திருச்சிக்கு மெட்ரோ ரயில்! அப்போ சேலம், நெல்லைக்கு? சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல்!
சென்னை: திருச்சி, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது குறித்த சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 45 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் அமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தலைநகர் சென்னையின் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பொருட்டு, மெட்ரோ ரயில் சேவை திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சென்னையில் 2 வழித்தடங்களில், 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை தற்போது செயல்பாட்டில் உள்ளது. சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரியாக 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களான கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லையிலும் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தப்பட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சேலம், திருச்சி, நெல்லை ஆகிய இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சேலம், திருச்சி, நெல்லை ஆகிய ஊர்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று சமர்ப்பித்துள்ளது. அதில் திருச்சியில் 26 கி.மீ தொலைவுக்கு ஒரு கட்டமாகவும், 19 கி.மீ தொலைவுக்கு ஒரு கட்டமாகவும் என 45 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியைப் பொறுத்தவரை மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் திருநெல்வேலியில் லைட் மெட்ரோ மட்டுமே அமைக்க முடியும் என்றும், அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ சமர்ப்பித்துள்ள இந்த ஆய்வறிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும். பரிசீலனைக்குப் பிறகு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை அரசு வழங்கும். அதன் பின்னர் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications