அடுத்த பஞ்சாயத்து.. "ஓசி பீர்" கேட்டு.. குடிபோதையில் ரகளை.. சர்ச்சையில் திமுக எம்பி மகன்..!

ஓசி பீர் கேட்டு ரகளை செய்த திமுக எம்பியின் மகன் மீது புகார் தரப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓசி பீர் வாங்கி தர சொல்லி ஒரு ஸ்டார் ஹோட்டலில் பிரச்சனை செய்துள்ளார் திமுக எம்பி சிவாவின் மகன்.. இது சம்பந்தமாக சென்னை போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

திருச்சி சிவாவின் மகன் பெயர் சூர்யா.. நேற்று அவருக்கு பிறந்த நாள்.. அதனால் தன்னுடைய நண்பர்களுடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக 4 பேருடன் சென்னை அண்ணா சாலையிலுள்ள பார்க் ஹோட்டலுக்கு நேற்றிரவு வந்தார்.

 Trichy sivas son attacked by friend over drinking beer in Chennai

அங்கு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடியும் முடித்தார்.. எல்லாருமே மது அருந்தினார்கள்.. பின்னர், மதுபோதையில், பார்க் ஹோட்டலின் வாசலில் தன்னுடைய நண்பர்களோடு பேசிக்கொண்டுந்தார்.

அப்போது, தன்னுடைய முன்னாள் நண்பரான பஜாஜ் நிறுவனத்தின் மண்டல மேலாளரான ஸ்ரீராம் என்பவரை அங்கு சந்தித்தார்.. ஸ்ரீராம் கோடம்பாக்கத்தை சேர்ந்தவர்.. நீண்ட நாட்கள் கழித்து பார்ப்பதால் சிறிது நேரம் பேசிவிட்டு, 4 பீர் ஆர்டர் செய்யும்படி சூர்யா ஸ்ரீராமை கேட்டுள்ளார்.

ஸ்ரீராமும் 4 பீர்களை ஆர்டர் செய்து, பில் கொடுப்பதற்காக தன்னுடைய ஏடிஎம் கார்டையும் தந்தார்.. ஆனால் அதில் பணம் வரவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் சூர்யாவும், மற்ற நண்பர்களும் சேர்ந்து ஸ்ரீராமை கேலி செய்துள்ளனர்.. ஒரு கட்டத்தில் இது வாக்குவாதமாகிவிட்டது.. இறுதியில் கைகலப்பு வரை சென்றுவிட்டதாகவும் தெரிகிறது.

இதனால் செய்வதறியாது திகைத்த ஸ்ரீராம் அவசர உதவி எண்ணான 100 க்கு போன் செய்து, தன்னை சூர்யா உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து தாக்குவதாக சொன்னார்.. இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே திமுக என்றாலே ரவுடி கட்சி என்று பெயர் பதிந்துவிட்ட நிலையில், அதை களையவும், திமுக என்ற பாரம்பரிய கட்சியின் பலத்தை மேலும் நிலைநாட்டவும் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகிறார்.. ஓசி பிரியாணி கட்சி என்று பெயர் தங்கிவிட்ட நிலையில், ஓசி பீர் என்று அடுத்த அடைமொழியுடன் இதை அதிமுக தரப்பில் விவகாரமாக்கி வருகிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+