நான் ஜாலியாக பேசினேன்.. திரிஷாவை மதிக்கிறேன்.. விசாரணைக்கு ஆஜர் ஆனபின் மன்சூர் அலிகான் பேட்டி
சென்னை: நான் ஜாலியாக பேசியதை திரிஷா தவறாக புரிந்து கொண்டார். திரிஷா குறித்து உள்நோக்கத்துடன் நான் பேசவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் போலீஸ் விசாரணையின் போது கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இது குறித்து நடிகை திரிஷா தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் கூறுகையில், மன்சூர் அலிகான் என்னைப்பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான முறையில் பேசும் வீடியோ குறித்து நான் கேள்விப்பட்டேன்.

அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்திருந்தார். நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.
வழக்கு பதிவு: மன்சூர் அலிகான் த்ரிஷாவுடன் சேர்த்து குஷ்புவையும் பேசியிருந்தார். இது தொடர்பாக கூறியிருந்த குஷ்பு, மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். எனது சீனியரிடம் பேசியுள்ளேன். அவரை சும்மா விடக் கூடாது என போட்டிருந்தார். இந்த நிலையில் இதனிடையே நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மன்சூர் அலிகான் மீது சட்டப்பிரிவு 509ன் கீழ் மற்றும் இதர தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி மன்சூர் அலிகான் விளக்கம் அளிக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜீவால் அறிவுறுத்தியிருந்தார்.
மனுவை திரும்பப் பெறுவதாக: இந்த வழக்கில் மன்சூர் அலிகான் கைது செய்யப்படலாம் என கூறப்பட்ட நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எதற்காக தாக்கல் செய்து விட்டு, திரும்ப பெறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
அப்போது, எதிர் மனுதாரராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் என குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்த்துள்ளதால் மனுவை திரும்பப் பெறுவதாக கூறப்பட்டது. இதனால், நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம். நீதிமன்றம் விளையாட்டு மைதானம் இல்லை எனக்கூறி மனுவை வாபஸ் பெற நீதிபதி அனுமதி அளித்தார்.
ஜாலியாக பேசினேன்: இதற்கிடையே இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜர் ஆனார். மன்சூர் அலிகானிடம் அரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, வீடியோவில் பேசியது நான் தான், ஜாலியாகவே பேட்டி கொடுத்தேன். நான் ஜாலியாக பேசியதை திரிஷா தவறாக புரிந்து கொண்டார்.
எந்த உள்நோக்கத்துடனும் திரிஷா குறித்து நான் அவ்வாறு பேசவில்லை. என் பேச்சால் திரிஷா வருத்தம் அடைந்தால் அதற்காக நானும் வருந்துகிறேன்" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் விசாரணைக்கு ஆஜரான பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மன்சூர் அலிகான், தனிப்பட்ட முறையில் நடிகை திரிஷவை பற்றி பேசவில்லை" என்றார்.
-
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications