த்ரிஷாவின் 'பச்சை நிற' உடை ரகசியம்! அரசியல் சிக்னலா? ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் விவாதம்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகினரின் வருகை வழக்கம் போல் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, சென்னை அபிராமபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்த நடிகை த்ரிஷாவின் வருகை, இப்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணம், அவர் அணிந்து வந்த "பச்சை நிற" உடைதான்.

உடை நிறத்தால் கிளம்பிய விவாதம்
பொதுவாகவே தேர்தல் காலங்களில் பிரபலங்கள் அணியும் உடையின் நிறம் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியின் நிறத்தோடு ஒத்துப்போனால், அது அவர்கள் அந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ என்ற கேள்வியை எழுப்புவது வழக்கம். கடந்த தேர்தலில் விஜய் ஓட்டிய கருப்பு - சிவப்பு சைக்கிள் கவனம் பெற்றது. இன்று காலை த்ரிஷா கார் ஏறி ஆழ்வார்பேட்டையில் வாக்குச்சாவடிக்கு வந்திறங்கியபோது, அவர் அடர் பச்சை நிறத்திலான சுடிதார் அணிந்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள், த்ரிஷாவின் இந்த நிறத் தேர்வுக்குப் பின்னால் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்குமோ என சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.
விஜய்யுடன் வராதது ஏன்?
சமீபத்தில் நடந்த ஒரு முக்கியத் திருமண விழாவில் விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாகக் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்திருந்தன. இதனால் இன்று இருவரும் ஒன்றாக வந்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் தனது கட்சியின் கோட்டையான நீலாங்கரையிலும், த்ரிஷா ஆழ்வார்பேட்டையிலும் தனித்தனியாகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இரு இடங்களுக்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு இருப்பதாலேயே அவர்கள் தனித்தனியாக வந்ததாகக் கூறப்பட்டாலும், த்ரிஷாவின் தனித்துவமான 'பச்சை நிற' உடை அந்த இடைவெளியையும் தாண்டி பல யூகங்களை உருவாக்கியுள்ளது.
பச்சை நிறத்தின் பின்னணி என்ன?
"த்ரிஷா ஏன் பச்சை நிறத்தைத் தேர்ந்தெடுத்தார்?" என்பதுதான் இப்போது எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ட்ரெண்டிங் தலைப்பாக உள்ளது.
சில ரசிகர்கள், இது ஒரு குறிப்பிட்ட கட்சியின் அரசியல் தலைவர் ஒருவரின் உடை ஸ்டைலை மறைமுகமாகக் குறிக்கிறதா? என்று கேள்வி எழுப்புகின்றனர். வேறு சிலரோ, பச்சை நிறம் என்பது 'வெற்றி' மற்றும் 'வளர்ச்சியின்' அடையாளம், அதை வெளிப்படுத்தவே அவர் இந்த நிறத்தை அணிந்துள்ளார் என்கின்றனர்.
தன்னுடைய திரையுலகப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தையோ அல்லது தனிப்பட்ட மாற்றத்தையோ இது குறிக்கிறதா? என்றும் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
த்ரிஷாவிற்கே வெளிச்சம்
வாக்களித்துவிட்டு வெளியே வந்த த்ரிஷா, மை அணிந்த தனது விரலைச் சிரித்தபடி காட்டிவிட்டுச் சென்றாரே இருப்பினும், அவர் வாக்களித்த புகைப்படங்கள் பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே, த்ரிஷாவின் பச்சை உடைக்கு என்ன அர்த்தம்?என்ற தேடல் இணையத்தில் அதிகரிக்கத் தொடங்கியது.
சினிமா பிரபலங்களின் சிறிய அசைவுகள் கூட தேர்தல் நேரத்தில் பெரிய அரசியல் செய்தியாக மாறும் என்பதற்கு இன்று த்ரிஷா அணிந்து வந்த இந்த பச்சை நிற உடையால் எழுந்த விவாதமே சாட்சி. இது வெறும் தற்செயலான நிறத் தேர்வா அல்லது திட்டமிட்ட சிக்னலா என்பது த்ரிஷாவிற்கே வெளிச்சம்












Click it and Unblock the Notifications