சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பவர்" இருக்கிறவரை தான் ராசா.. எல்லாம் போச்சுன்னா "பம்ப்" அடிச்சுருவாங்க.. லேட்டஸ்ட் உதாரணம் டிரம்ப்

நாளுக்கு நாள் டிரம்பின் அட்டகாசத்தால் மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: எல்லாமே "பவர்" இருக்கும் வரைதான்.. "பவர்" போச்சுன்னா எல்லாமே போச்சு.. இதுதான் நமக்கு டிரம்ப் விவகாரம் சுட்டிக் காட்டும் "பாடம்".

நல்லா யோசிச்சுப் பாருங்க.. இந்த டிரம்ப் பதவியில் இருந்தபோது யாரெல்லாம் அவரை சீண்டக் கூட தயங்கினார்களோ அவர்கள்தான் இன்று அவருக்கு எதிராக அதிரடி காட்டிக் கொண்டுள்ளனர்.

டிரம்ப் இப்போதுதான் தப்புத் தப்பாக டிவீட் போடுகிறாரா என்ன.. நிச்சயம் கிடையாது.. இவர் என்று பதவிக்கு வந்தாரோ அன்று முதலே அவர் செய்த எல்லாமே தப்புதான்.. அப்போவெல்லாம் யாரும் அவரை சீண்டக் கூட இல்லை.

 சர்ச்சை

சர்ச்சை

டிரம்ப் பேசாத பேச்சா.. அவர் ஆடாதா ஆட்டமா.. நிச்சயம் அவரைப் போல ஒரு மோசமான உலகத் தலைவரை இதுவரை உலகம் கண்டது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் பல நாடுகளுக்கு அமெரிக்கா என்றால் மரியாதை இருந்தது. பலருக்கு பயம் இருந்தது. பலருக்கு அது டீசன்ட்டான ஒரு நாடாகவே இருந்தது.

கிண்டல்

கிண்டல்

ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் அமெரிக்காவை கோமாளித்தனமான நாடாக யாருமே பார்த்தது இல்லை. ஆனால் அமெரிக்காவை அப்படி காமெடி பீஸாக மாற்றியவர் டிரம்ப் தான். இவரது ஆட்சிக்காலத்தில்தான் ரோட்டில வர்றவன் போறவன் எல்லாம் அமெரிக்காவை கிண்டலடித்து டீஸ் செய்யும் நிலை ஏற்பட்டது. அமெரிக்கர்களே கூட டிரம்ப் பொம்மையை ஊர் ஊராக வைத்து பின்னால் உதைத்தும், குத்தியும் காமெடி செய்த காட்சியையும் உலகம் காண நேர்ந்தது. டெர்ரர் பீஸாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டால் பெரிய காமெடி பீஸாக மாறிப் போனார் டிரம்ப்.

சம்பவம்

சம்பவம்

ஆனால் அப்பவும் கூட அவர் டிவிட்டரில், பேஸ்புக்கில் போட்ட எந்த கமெண்ட்டையும், டிவிட்டரோ அல்லது பேஸ்புக்கோ தடை செய்தது கிடையாது. மாறாக கண்டுக்காமலேயே இருந்தது. ஜார்ஜ் பிளாய்ட் படுகொலை சம்பவத்திலேயே டிரம்ப் பேசிய எதுவுமே தடை செய்யப்படலையே. ஆனால் இன்று டிரம்ப்புக்கு எதிராக பலரும் கிளர்ந்து எழ அவரிடமிருந்த அதிகாரம் பறிபோனதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆட்டம்

ஆட்டம்

இதிலிருந்து பலரும் பாடம் கற்றுக் கொள்ளலாம்.. கையில் பவர் இருக்குன்னு ஆட்டம் போடக் கூடாது. ரொம்ப பேசக் கூடாது. வெறியாட்டம் போடக் கூடாது.. காலம் ஒரு நாள் மாறும்.. அப்போது சரியான முறையில் திறமையாக ஆப்பு வைக்கப்படும்.. இதுதான் டிரம்ப் உலகத் தலைவர்கள் பலருக்கும் கற்றுக் கொடுத்திருக்கும் சரியான பாடமாகும்... கூட்டி கழிச்சு யோசிச்சு பாருங்க.. கரெக்டாதான் இருக்கும்.

English summary
Trump has been hated by the people for his vile activities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X